உங்களுக்குத் தெரியுமா?
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய சில தெரிவுகள்
- வண்ணத்துப்பூச்சிகள் பூவில் இருந்து அமிழ்தத்தை (nectar) தமது நீண்ட தும்பிக்கை வாய்மூலம் உறிஞ்சிக் குடித்துக் கொள்ளும்.
- சில வகை வண்ணத்துப்பூச்சிகள் பழங்களில் இருந்து இரசத்தையும், நீர் போன்றவற்றையும் உட்கொள்கின்றன.
- பல வண்ணத்துப் பூச்சிகள் உணவருந்த ஈரமான இடத்திற்கு வருகை தருவது சேற்றுக்கும்மாளம் (puddle party) என்றழைக்கப்படும்.
- பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் வாழ்க்கை 2 வாரங்களே. ஆயினும் வட அமெரிக்க இராச வண்ணத்துப் பூச்சிகள்( Monarch Butterflies) அவற்றின் கால நிலைப் பெயர்ச்சி சந்ததிகள் (migratory generation) காரணமாக 6-8 மாதங்கள் வரை வாழ வல்லன.
- மினசோட்டா, ஒன்றாரியோ நில இராச வண்ணத்துப் பூச்சிகள் மெக்கசிக்கை வரை சென்று பனிக்காலம் தரித்து, இலை துளிர் காலத்தில் ரெக்ஸாஸ் பிரதேசங்களில் ஓன்று கூடி இனம்பெருக்கும். இவை 3-4 தலைமுறைக்கு ஓருமுறை எமது பிரதேசங்களுக்குத் திரும்பும்.
- வண்ணத்துப் பூச்சிகள் தமது கால்களாலேயே சுவைகளை அறிந்து கொள்வன.
வண்ணத்துப் பூச்சியா அல்லது விட்டிற் பூச்சியா?
வண்ணத்துப்பூச்சிக்கும் (Butterfly), விட்டிற்பூச்சிக்கும் (Moth) வித்தியாசம் என்னவென்று தெரியுமா? விட்டிற்பூச்சி அந்திப்பூச்சி என்றும் அழைக்கப்படும். நாம் மூன்று முக்கிய விடயங்களில் வண்ணத்துப்பூச்சிகளையும், விட்டிற்பூச்சிகளையும் வேறுபடு்த்தலாம்.
வண்ணத்துப் பூச்சியா | விட்டிற் பூச்சியா |
வண்ணத்துப்பூச்சிகள் நீண்ட நூல் போன்ற கொம்புகளைக் antennae கொண்டிருக்கும் | விட்டிற் பூச்சிகள் இறகு போன்ற கொம்புகளைக் கொண்டிருக்கும் |
வண்ணத்துப்பூச்சி மசுக்குட்டிப் புழுக்கள் மினுங்கள் கல் முட்டை போன்ற chrysalis கோதுகளினுள் வளர்ந்து வண்ணப்பூச்சியாக வெளிவரும் | விட்டிற் பூச்சிக்கள் பட்டுப்புழு போன்ற பட்டுக்கோதினுள் silk cocoon வளர்ந்து வெளிவரும் |
வண்ணத்துப் பூச்சிகள் பகலில் பறக்கும் | விட்டிற் பூச்சிகள் இரவில் பறக்கும். இதனால் தான் அந்திப் பூச்சி என்றும் அழைக்கப்படும். |
Tags: butterfly, chrysalis, cocoon, moth, silk, அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி