மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2018
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன.
சுமார் இரண்டு மணிக்கு இச்சங்கங்கள் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து, அவர்களது சிறப்பான கலைகளை எடுத்துக்காட்டும் வகையில் , நடனம், வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு நடத்தினர். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக மினசோட்டாவின் மாநில நகரசபை நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். அமெரிக்க, இந்தியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு இருநாட்டு தேசிய கீதங்களும் பாடப்பட்டன. கல்வி, கலாச்சார தகுதி அடிப்படையில், ஆறு மாணவ / மாணவிகளுக்குப் கேடயங்களை IAM அமைப்பினர் வழங்கிச் சிறப்பித்தனர்.
வண்ணமயமான உடைகள், காது குளிர இந்திய இசையென காலை 11:00 மணிக்குத் தொடங்கிய சுதந்திர தின விழா இரவு 9:00 மணிக்கு இனிதே நிறைவுற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக
ராஜேஷ் கோவிந்தராஜன்.