\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இனவாதமே பிணமாகு

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments

கண் எட்டும் தூரம்
கரையுமில்லை!

கரையைத் தேடவே
துடுப்புமில்லை!

நீந்தி ஓடத்தான்
மீனுமில்லை!

மீனாய் வாழவே
வழியுமில்லை!

தன்னந் தனியே
தத்தளிக்கிறான்  – இவனும்

நெருப்பு அள்ளக்
காணியிலே!

கறுப்பு வெள்ளைத்
தோணியிலே!

இயற்கை தந்த
நிறத்தினிலே

இலங்கை பிரிந்த
புறத்திலே!   

எமனின்  மனமாகும்
இனவாதமே பிணமாகு!

குயில் ஓசை  இங்கே
புயல் பாசை பேசுதுவே!

மயில் இறகு இங்கே
வெயில் கயிறு வீசுதுவே!

எலும்பில்லா
தசை ஆகிறேன் -நானும்

அரசியலின் ஆட்டமே
இனவாத ஓட்டம்!

அறிஞரின் ஐந்தறிவு
ஆகட்டுமே பகுத்தறிவு!

மதங்களுக்கு மரியாதை
புலன்களுக்குப் புரியாதா!

இலங்கையில் கனமாகும்
இனவாதமே பிணமாகு!

ஏழு அதிசயங்களை  ஏணி விட்டு
இழுத்து விடவே!

இனவாதத்தை மேனி விட்டு
கொளுத்திடுவோம்!

                        

-SNM AATHIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad