\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அழகே..

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments

குளுகுளு காற்று அழுவது கேட்டேன்

உன் பார்வையின் குளுமை அதற்கில்லையாம்

 

சலசலத்தோடும் நதியின் கண்ணீர் பார்த்தேன்

உன் நகைத்தல் இனிமை தன்னிடம் இல்லையாம்

 

பளபளத்து ஜொலித்தபூ வாடிடக் கண்டேன்

உன்னுதட்டு பொலிவைப் பெறுவது கடினமாம்

 

பரபரக்கும் பட்டாம்பூச்சி பறவாமைக் கண்டேன்

உன் முகவண்ணம் கண்டு பொறாமை கூடியதாம்

 

வரிவரியாக எழுதும் கவிஞரின் வெற்றுத்தாள் கண்டேன்

உன் நளினத்திற்கு உவமை காணாமல் தவித்தாராம்

 

தரதரவெனக் காளையர்கள் கண்ணிமைக்காதது கண்டேன்

உன் சிலைவடிவைக் கணமும் இமை மறைக்ககூடாதாம்

 

-பிரியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad