\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உயிர்ச்சொற்களுக்கான சவப்பெட்டி

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments

எப்போதுமான முகாந்திரமற்ற

இலையுதிர்தல் தொடர்கிறது

வீதியின் விளிம்புகளில்…..

வசந்தத்தை ஒரு வாளியில்

மொள்ளுகிறது ஆளும் அரசுகள்.

ஆங்காங்கே உடைந்துக்கிடக்கின்றன

செத்துப்போன இந்திய நாணயங்கள்

காலாற நடந்த வீதியின் வீச்சை

கணத்த இதயத்தோடு பார்க்கும்

நடுத்தரவர்க்க நாய்கள்

அவ்வப்போது முளைக்கும்

இலவச எலும்புத்துண்டுகள்

கூப்பாடு போடலாமென்று

கூடிமுடிவெடுத்தது வாலாட்டிக்கூட்டங்கள்.

நிமிர்த்தவா முடியும்?

எப்போதும்போல் வந்தது

ஐந்தாண்டுக்கொருமுறை

நாடகம்.

கிடைத்தன எலும்புத்துண்டுகள்

ஜனநாயகத்தின் வாய்மூடிவிட்டது.

ஜனங்களின் வயிறுகள்

காலிக்குடுவைகள்.

மக்களுக்கான சவப்பெட்டியை

மக்களே சுமந்தனர் மடிநிறைய.

பெட்டிநிறைய வழிந்தது

மக்களாட்சி…

 

முனைவர் சு.விமல்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad