\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அலை பாயும் மனதினிலே !

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments

சிற்பி

கையிலே சிற்றுளி

செதுக்க முடியாமல்

சிலையாக நின்றான்

அலைபாயும் மனதோடு !

 

அவன்

வசிப்பது வசந்த மாளிகை

புசிப்பது அறுசுவை உணவு

துயில்வது பஞ்சு மெத்தை

துக்கம் மனதோடு தழுவி

தூக்கம் கண்களைத் தழுவாமல்

தூங்காமல் அலை பாய்கிறதே!

 

அவன்

பொய் முகத்தை

மெய் முகமெனக் காட்டி

பணம் பதவி புகழ் நாட்டி

பசித்தவன் போல்

மன நிம்மதி தேடி

கடல் அலைகள்போல்

கவலையில் அலைகின்றானே !

 

உலகில்

காதலே அலைபோலே

மோதலே அதன் மேலே

காதலர்கள்

முடிவில் சாதலே நினைப்பது

அலை பாயும் மனதினிலே !

 

  • கவிஞர் பூ. சுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad