\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ரொறோன்ரோ தமிழர்த் தெரு விழா

வருடா வருடத் தமிழர் கோடைவிழாவாகிய தெரு விழா மீண்டும் கோலாகலமாக ஆகஸ்ட் 25-26 தேதிகளில் ரொறோன்ரோ நகரின் ஸ்காபரோ பகுதியில் மார்க்கம் வீதியில் நடைபெற்றது. குறிப்பாக மக் நிக்கல் அவனியூ விற்கும் பாஸ்மோர் அவனியூவிற்கும் இடையே நடைபெற்றது.

பண்டைய யாழ்ப்பாண ஆஸ்டின் மார்டின் கார்களும், ஆகா, ஓகோ என்று சுவைக்க ஐஸ்கிரீம் பழங்களும், சுடச்சுடக் கூழும் கிடைக்கப் பெற்றன. யாழ்ப்பாண மண்வாசனை மறவாதவருக்கு பனம் பண்டங்கள் பலவும், பசியாறப் பலவகைப் பணியாரங்களும், அப்பம்,தோசை கொத்து உரொட்டிகளும் கிடைக்கப்பெற்றன.

இவ்விடம் கனேடிய மற்றும் தமிழ் இயல் இசை நடனங்களும், கேளிக்கை நிகழ்வுகளும் மக்களுக்காகத் தருவிக்கப்பட்டன.

வடஅமெரிக்காவில் தமிழர் தலைநகர்  ரொறோன்ரோ, தனது தமிழ் கலாச்சாரந் தனை எம்மக்கள் மத்தியிலும், உடன் வாழும்  கனேடிய,மற்றும் வட அமெரிக்க மக்களையும் வரவேற்று, கலாச்சார ஆற்றலை எடுத்துக் காட்டும் ஆற்றலில் வல்லவர்கள் என்பது இவ்விடம் குறிப்பிட வேண்டியதொன்றாகும்.

படத்தொகுப்பு

தே. துசியந்த்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad