\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உட்பெரி நாட்கள் திருவிழா 2018

வட அமெரிக்காவில் கோடை காலம் முடியப் போகும் காலம்;   பள்ளி மற்றும் கல்லூரி ஆரம்பிக்கும் முன்பு அனைத்துப் பெருநகரங்களும் அவற்றைச் சுற்றியுள்ள  சிறு நகரங்களிலும் விழா எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு காட்சிகள் நடத்துவதில், அமெரிக்காவில்  டெக்சாஸ் மாநிலம் முதல் இடத்திலும் மினசோட்டா மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளனவாம்.

மினசோட்டா மாநிலத்தில் உட்பெரி  என்ற நகரத்தில் நடைபெற்ற ”உட்பெரி டேய்ஸ் ()” மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த நகரம் உருவாகி 50 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் விதமாக ”உட்பெரி டேய்ஸ்” மேலும் சிறப்பானது.  இந்த விழா ஆகஸ்ட் மாதம் கடைசி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கொண்டாப்பட்டது. வியாபரக் கடைகள், உணவுக் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு மற்றும் பொழுது போக்குக் காட்சிகள் ஆகியவை இடைபெற்றன. உள்ளூர்ப் பாடகர், பாடகிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று மக்களின் ரசனைக்குத் தகுந்தவாறு பாடல்களையும் இசையும் வழங்குவார்கள்.

சனிக்கிழமை இரவு சிறப்பு வான வேடிக்கை (fire works) விடப்பட்டன. ஞாயிறு மதியம் 1 மணிக்கு சிறப்பு அணிவகுப்பு நடத்தினார்கள். இந்தச் சிறப்பு அணிவகுப்பில் உள்ளுர் நகர நிறுவத்தினர், பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் உள்ளுர்  வியாபரக் கடைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்காக!

  • ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad