நவராத்திரி திருவிழா 2018
முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.
ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் சமாஜ் அமைப்பினர் வுட்பரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். வண்ணமயமாக, பலவித இசைக் கோலங்களுடன் கோலாகலமாக நடைபெற்ற விழாவின் முதல் நாள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக.
- ராஜேஷ் கோவிந்தராஜன்