\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அழகிய ஐரோப்பா – 3

அந்த ஏழு நாட்கள்

(அழகிய ஐரோப்பா – 2/அவளும் நானும்)

“ஹொவ் ஓல்ட் இஸ் ஹீ ” என என் மகனைக் காட்டி கேட்டாள்

“சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்” என்றேன்.

வளைவுகளின் ஒரு முனையைத் திறந்து எங்களைத் தன் பின் வருமாறு அழைத்து ஒரு இமிகிரேஷன் அதிகாரியைச் சுட்டிக் காட்டி அடுத்ததாக எங்களை அவனிடம் போகுமாறு பணித்ததுடன் நில்லாது குழந்தைகள் உள்ளவர்களை எங்கள் வரிசையில் வந்து நிற்குமாறு அழைத்தாள்.

“குழந்தைகளின் வரிசை” என்று அவள் சொன்னதும் என்னிடம் இருந்த தன் லக்கேஜ்களைப் பிடுங்கிக் கொண்டு;

“ஐ ஆம் நாட் எ பேபி எனிமோர்” என்றான் என்மகன்.

“தம்பி பிளீஸ் சத்தம் போடாதை, அவள் உன்னைச் சொல்லவில்லை… பின்னுக்கு வாற மற்ற ஆக்களைத்தான் அப்பிடிச் சொன்னவள்” என்று சமாதானம் செய்தேன்.

“அவளே பெரிய மனசு பண்ணித் தனியாக விடும்போது இவன் வேற ஈகோ பார்க்கிறான்”

“ஓமோம் நல்ல பெரிய மனசுதான் அவளுக்கு” என்றாள் மனைவி நக்கலாக

“ ஏதோ ஒரு ஹீரோவோட வந்தபடியால ஒரு மணித்தியாலத்தை சேவ்  பண்ணிட்டாய்”

“என்னது”

“இல்லை, நான் தம்பியைச் சொன்னேன்”  என்றபடி மகனிடம் திரும்பினேன்.

மணி இப்போது காலை ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் சித்தப்பா மூன்று தடவைகள் போன் போட்டு எங்கள் வருகையை உறுதி செய்துக் கொண்டார்.

அவர் உண்மையில் என் மனைவிக்குத்தான் சித்தப்பா ஆனால் நானும் அப்படியே கூப்பிட்டுப் பழகிவிட்டேன். காலை ஏழு மணிக்கே ஹீத்துரு விமான நிலையத்தில் வந்து எங்களுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த எங்களை அந்த இமிகிரேஷன் அதிகாரி ஒருவிதமான புன்னகையோடு வரவேற்றான்.

பாஸ்போர்ட்டை நீட்டுகின்ற வரை அம்பியாக இருந்தவன் திடீரென அந்நியனாக மாறி…

“என்றைக்கு திரும்புவதாக உத்தேசம்” என்றான் விருந்தோம்பும் பண்பு துளியும் இல்லாமல்.

“ஏழு நாட்கள்” அதன் பின் “பிரான்ஸ் போவதாக இருக்கிறோம்” என்றேன்.

“விமானத்திலா? ஃபெரியிலா?”

“ஃபெரியில்” என்று சொன்னதும்

“எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்” என்றான்

“ஆளுக்கு ஆயிரம் படி மொத்தம் நாலாயிரம் டாலர்” என்றேன்

தலையைச் சொறிந்தபடி “எத்தனை நாட்கள் இங்கு இருப்பதாகச் சொன்னீர்கள்” என்றான் மறுபடியும்

“ஏழு நாட்கள்” என்றேன்

மீண்டும் தலையைச் சொரிந்தபடி யாரிடமோ போன் பண்ணி

“நான்காயிரம் அமெரிக்க டாலருக்குரிய பிரிட்டிஷ் பவுண்ட் எவ்வளவு” என வினவினான்.

போனை வைத்து விட்டு என்னிடம் திரும்பி

“இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது பிரிட்டிஷ் பவுண்ட் உங்கள் ஒரு வாரச் செலவுக்கு போதுமானதாக இல்லை, ஒரு வாரம் கழித்து ஃபிரான்ஸ் போவதாக வேறு சொல்கிறீர்கள் பணத்துக்கு என்ன செய்வதாக உத்தேசம்” என்றான்.

“என்னிடம் போதியளவு பணம் எடுக்க கிரெடிட் கார்ட் உள்ளது” என்றேன்.

ஒருவித புன்னகையுடன் பாஸ்போர்ட்டில் தொண்ணூறு நாட்கள் தங்குவதற்குரிய ஸ்டாம்ப் அடித்து மூடிக் கையில் கொடுத்து வலது பக்கம் போகுமாறு கையைக் காட்டினான்.

படியில் இறங்கும் போது மனைவியிடம் திரும்பி

“ஏழு நாட்கள் தங்க காசு காணாது என்றவன் தொண்ணூறு நாள் வீசா போட்டுத் தாறான்…அய்யாவின் பவரை பார்த்தியோ” என்றேன்  

“பவர் ஸ்டாரோ… எங்கே” என அவள்வேறு கிண்டல் பண்ணினாள்

படியில் இறங்கி கீழே வரும்போதே சித்தப்பா தொலைவில் இருந்து கை காட்டியபடி வந்தார்.  

“எப்பிடி பயணம்? ஏன் இவ்வளவு சுணக்கம்? என கேள்விக் கணைகளைத் தொடுத்தவாறு முதல் முறை காணும் என் பிள்ளைகளை இறுக கட்டி முத்தமிட்டார்.

மூன்றாம் இலக்க பேக்கஜ் கிளைம் ஏரியா சென்று எங்கள் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.

மூன்றாவது மாடியின் “D” வரிசையில் நாங்கள் போவதற்கான கார் பார்க் பண்ணப் பட்டிருந்தது.

லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ‘லிப்ட்’ இல் போகும்போது…

“நான் நினைச்சேன் பெரிய லக்கேஜ் ஒண்டும் இல்லை எண்டு… டிக்கியில் இடம் காணாது போல இருக்கு” என்றார்.

“வாட் இஸ் த டிக்கி மீனிங் தாத்தா” என்றாள் என் மகள்

“ரங்க்” என்றேன் அவளுக்கு புரியும் படியான அமெரிக்கன் இங்கிலீஷில்

“நீங்கள் ஓடப் போறிங்களோ” என்று கேட்டார்.

“அப்பிடியென்றால் அவர் காருக்கு பின்னாலைதான் ஓட வேணும்” என்றாள் என் மனைவி

எதுவும் புரியாதவராக விளித்தார்.

“எனக்கு மேனுவல் கார் ஓடி பழக்கமில்லை” என்றேன்.

“ஓகே” என்றபடி  டிரைவர் சீட்டில் அமர்ந்தார்.

எல்லோரும் ஏறி அமர்ந்தது தான் தாமதம்…  பார்க்கிங் ஐ விட்டு வெளியே இறங்கியதும் புற்றில் இருந்து ஈசல் பறப்பது போல் “சுர்” என்று கார் வேகம் பிடித்து ஒடத் தொடங்கியது.

எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென…

பயணம் தொடரும்…

-தியா-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad