\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அழகிய ஐரோப்பா – 6

(அழகிய ஐரோப்பா – 5/படகுச் சவாரி)

பயணங்கள் முடிவதில்லை

லண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். …

நாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

எங்கள் அனைவருக்குமான ரிக்கெட் எடுத்த பின்னர் சொல்லி வைத்த மாதிரி சரியான நேரத்துக்கு கூர்  மூஞ்சி ரெயில் வந்து எங்கள் முன் நின்றது.

ரயிலின் முன்புறம் கூரான மூஞ்சியுடன் உள்ளே விமானம் போன்ற அமைப்பில் இருந்தது. ஆட்கள் ஏறினதும் ஆட்டோமேட்டிக் கதவு தானாக மூடிக்கொண்டது.

அடுத்த ஸ்டேஷனின் பெயர் என்ன என்பது எல்.ஈ.டி. யில் எல்லாக் கதவுக்குப் பக்கத்திலும் வருகிறது. ஒலிப்பதிவாகவும் வருகிறது…

“எந்த ஸ்டாப்பில் இறங்குவது” என்று அவளிடம் கேட்டேன்

“சரியாக ஐந்தாவது ஸ்டாப்பில்…” என்று இழுத்தவள்  

“கடைசி ஸ்டாப்” என்று முடித்தாள்.

சரியாக இருபத்து ஐந்து நிமிடங்களில் லண்டன் சென்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் சென்று நின்றதும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினோம்.

செக்கிங் எதுவும் இல்லை ஆனால் ஸ்டேஷனுக்குள்ளே வருகிற போதே எப்படியோ அதேபோல் டிக்கட்டை பஞ்ச் செய்யும் எந்திரங்கள் இங்கும் இருந்தன.

ஒவ்வொரு கேட்டிலும் டிக்கட்டை பஞ்ச் செய்ய வேணும் அப்படிச் செய்யாவிட்டால் கேட் திறப்பதில்லை. உள்ளே வரும் போதும் வெளியே போகிற போதும் இதே சிஸ்டம் தான்.

மிகவும் அழகாக தங்கத்தால் வேயப்பட்டது போன்ற கூரைகளும் பின்னிப் பிணைந்த பல வளைவுகள் கொண்ட தண்டவாள பாதைகளும் என புதிதாக வருபவர்களுக்கு இலகுவில் பிடிபடாத அமைப்பில் கட்டப்பட்டிருந்தது லண்டன் சென்ரல் ரெயில்வே ஸ்டேஷன்.

லண்டன் நேச்சுரல் மியூசியம் போவதற்கான அடுத்த ரெயில் எடுப்பதற்கு சப்வே எடுக்க வேண்டியிருந்தது. எஸ்கலேட்டர் எடுத்து கீழே போனோம்…

மறுபடியும் இன்னொரு எஸ்கலேட்டர் எடுத்தோம். ஒவ்வொரு எஸ்கலேட்டரும் சுமார் ஐம்பது தொடக்கம் அறுபது அடி நீளமிருக்கும் இப்படியே நான்கு எஸ்கலேட்டர்கள் எடுத்து கீழே போய் விட்டோம் ஆனால் எப்போது அடுத்த ஸ்டாப் என்பது மட்டும் சஸ்பென்சாகவே இருந்தது…

ஐந்தாவது எஸ்கலேட்டரில் இறங்கிய பின் நேராக நடந்து பின் இடப் பக்கம் திரும்பியபோது லண்டன் நேச்சுரல் மியூசியம் போவதற்கான ரெயில் வருவதற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் என்று எல்.ஈ.டி. திரையில் ஓடிக்கொண்டிருந்தது…

ஐந்து நிமிட பயணத்துக்கு பின் மூன்றாவது ஸ்டாப்பில் இறங்கியதும் ஒரு எஸ்கலேட்டர் எடுத்து மேலே போய் வலப் பக்கம் திரும்பி பார்த்தபோது ஒரு பிரமாண்டமான கட்டிடத்தின் முன் நின்றிருந்தோம்.

அதுதான் லண்டன் நேச்சுரல் மியூசியத்தின் முகப்பு தோற்றம்…  பார்த்தவுடன் பிரமிக்க வைக்கும் அழகுடையது.

அடுத்ததாக பக்கிங்காம் அரண்மனை மற்றும் லண்டன் பிரிட்ஜ் போகவேண்டி இருப்பதால்  “முடிந்தவரை விரைவாக பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்திடுங்கோ” என்று உள்ளே போவதற்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தேன்.

உலகில் மிகச் சிறந்த அருங்காட்சி கூடங்களில் இதுவும் ஒன்று. தேம்ஸ் நதி பற்றிய வரலாற்று பொக்கிஷங்கள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களை இங்கு வைத்து பாதுகாக்கிறார்கள்.

மிருகங்கள், பறவைகள், கற்கள், மரங்கள், இலைகள் என ஆளாளுக்கு கண்ணில் பட்டதையெல்லாம் படம் பிடித்தோம்.

ஏறக்குறைய பத்தாயிரம் காரட் எடை கொண்ட உலகின் மிகப் பெரிய ப்ளூ ரூபி கல் ஒன்று கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

செத்துப்போன பறவைகள், மிருகங்களைப் பதப்படுத்தி அப்படியே வைத்திருந்தார்கள். என் பிள்ளைகள் எல்லாவற்றையும் படம் பிடிப்பதில் முனைப்பு காட்டினர்.

பயணம் தொடரும்…

-தியா-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad