\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்

 

  1. வட அமெரிக்காவில் பிரதானமாக நன்றி நவிலல் நாளில் உண்ணப் படுவது,
    1. பன்றி
    2. செம்மறி ஆடு
    3. வான் கோழி
    4. அரிசி உணவு 
  2. கீழே தரப்பட்டவையில் வழக்கமாக உட்கொள்ளப்படாதது
    1. பூசணி மாக்கோது (Pumpkin pie)
    2. மசித்த உருளைக்கிழங்கு – (mashed potato)
    3. கிரான்பெரி பழவினி ரசம்
    4. வற்றாளங்கிழங்கு – (Sweet potato)
    5. மேலே கூறப்பட்ட அனைத்தும் 
  3. நன்றி நவிலல் நாள் அன்று குடும்பத்தவரை விருநதோம்பும் வழக்கம் தொடங்கியது எப்போது?
    1. பதினெட்டாம் நூற்றாண்டு
    2. பத்தொன்பதாம் நூற்றாண்டு
    3. இருபதாம் நூற்றாண்டு
    4. பதினேழாம் நூற்றாண்டு 
  4. வான்கோழி தின விளையாட்டு (Turkey day game / Turkey bowl) என்று அழைக்கப்படும் விளையாட்டு எது?
    1. தேசிய அமெரிக்க கால்பந்து விளையாட்டு (NFL)
    2. பள்ளிகளுக்கான அமெரிக்க கால்பந்து விளையாட்டு (High School Football)
    3. கல்லூரிக்கான அமெரிக்க கால்பந்து விளையாட்டு (College Football)
    4. கனவுருக் கால்பந்து விளையாட்டு (Fantasy Football) 
  5. அமெரிக்காவின் சில பாகங்களில் நன்றி நவிலல் நாள் வான்கோழி அகல் அடுப்பில் சமைக்காமல் பொரித்து சாப்பிடப்படும். அதன் காரண்ம் என்ன?
    1. சூடான நாட்டின் பகுதிகளில் அகல் அடுப்பு அதிவெப்பத்தை வீட்டின் உள்ள தரும் எனவே வெளியில் பொரித்துக் கொள்ளப்படும், அதே சமயம் குளிர் பிரதேசங்களில் அகல் அடுப்பு வீட்டின் நடுவே வெப்பத்தையும் மிருதுவான சமைத்த வான் கோழியையும் தரும்
    2. நன்றி நவிலல் வான்கோழி உணவு போதாமையால் எண்ணெயில் பொரித்துத் தாராளமாக உணவுக் கலரிச் சக்தியைப் பெற்றுக் கொள்ள உதவலாம்
    3. உடைந்த அகல் அடுப்புக்கள் உடன் திருத்தப்படாமையால் வான்கோழி பொரித்தலும் ஒரு பழக்கமாகியது
    4. மேலே சொல்லப்பட்ட அனைத்தும் 
  6. பதினேழாம் நூற்றாண்டில் குடியேறிகள் அமெரிக்கக் கப்பல் ஏறிய போது எந்த முக்கிய வரலாற்று ஆவணத்தை உருவாக்கிக் கொண்டனர்.
    1. கூட்டமைப்பு ஆவணம் (Confederate papers)
    2. மக்னா கார்ட்டா (Magna Carta)
    3. மே ஃபிளவர் ஒற்றுமை ஆவணம் (Mayflower compact) 
  7. பதினேழாம் நூற்றாண்டில் அமெரிக்க வட கண்டத்தில் குடியேறிகள் எவ்விடம்  வந்து இறங்கினர்
    1. ஜேம்ஸ் ரவுண்ட்
    2. பிளிமவுத் காலனி
    3. சார்ல்ஸ்டன்

– தொகுப்பு பனிப்பூக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad