\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்

 

ஹே… விஷ்… டு யூ ரிமெம்பர் தட் ஐ நீட் டு லீவ் எர்ளி இன் த மார்னிங்…..” கேட்டுக் கொண்டே பெட் ரூமிலிருந்து லிவிங்க் ரூமுக்குள் நுழைந்தாள் டெப்ரா…. லிவிங்க் ரூம் சோஃபாவில் அமர்ந்து மும்முரமாக கால்ஃப் சேனல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, “யெஸ் டார்லிங்க், ஐ டு ரெமெம்பர்…. ஐம் கோயிங்க் டு மிஸ் யூ….” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கட்டியணைத்து, கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்து இதழோடு இதழ் பதித்தான்  …….

அவளும் புன்னகைத்துக் கொண்டே, ”ஹேவ் யூ பீன் ட்ரிங்க்கிங்க் தட் மால்பெக்… யூ டேஸ்ட் ஈவன் பெட்டர்” எனச் சொல்ல, அதனையே அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு, அவளின் உதட்டைச் சிவப்பு திராட்சையாக மாற்றிச் சுவைக்கத் தொடங்கினான் விஷ்வா….

”ஒகே. ஒகே. ஒகே….. ஸீம்ஸ் லைக் சம்படி இஸ் இன் த மூட்” சொல்லிக் கொண்டே அவனை நளினமாக சோஃபாவில் தள்ளிவிட்டு, டி.வி ரிமோட் எடுத்துச் சேனலை மாற்றத் தொடங்கினாள் டெப்ரா…

————————————————————————

விஷ்வா…. சென்னை அண்ணா யுனிவர்ஸிடியில் எஞ்சினியரிங்க் முடித்து, பிட்ஸ் பிலானியில் மாஸ்டர்ஸ் முடித்து, ஒரு பெரிய தனியார் கம்பெனியில் மரியாதையான சாஃப்ட்வேர் வேலையில் சேர்ந்து அமெரிக்கா வந்தவன்… நான்கைந்து ஆண்டுகளாக ஒரே கம்பெனியில் வேலை செய்து, சில பதவி உயர்வுகளைப் பெற்று, ஆர்க்கிடெக்ட் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடன் இணைந்து பணி புரிவதற்காக, ப்ராஜக்ட் மேனேஜராக வந்தவள் டெப்ரா.

யுனிவர்ஸிடி ஆஃப் மினசோட்டாவில் எம்.பி.ஏ முடித்து விட்டு, இருபத்தி ஏழு வயதிலேயே மேனேஜர் பதவியை எட்டிப் பிடித்த அவள், மிகவும் புத்திசாலி மற்றும் திறமைசாலி. ஆறடி உயரம், அழகான முகம், ப்ளாண்ட் ஹேர்.. பருவத்தின் வனப்புகள் அனைத்தையும் பக்குவமாய்க் கொண்டவள். அந்த ஆறடி உயரத்திற்கும் மேலாக, ஆறு இஞ்ச் உயரமான ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு, முழங்கால் வரை நீளமுள்ள ஃபார்மல் ஸ்கர்ட், மற்றும் டாப்’பில் நடந்து வரும்பொழுது மொத்த ஆஃபீஸும் எப்படியாவது இரண்டாவது முறை ஒரு பார்வையை அவள் மேல் வீசும். ஆண்கள் பொதுவாக அவள் கடந்து செல்லும் வரை பொறுமையாக இருந்துவிட்டு, மீண்டும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்ப்பர். எதற்காக என்று ‘ஸைட்’ அடிக்கும் அனைவருக்கும் விளங்கியிருக்கும்.

அறிமுகம் கிடைத்து, இருவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து ஒரே சண்டைதான். “ஹி இஸ் ஃபுல் ஆஃப் ஹிம்ஸெல்ஃப்” அவன் குறித்து அவள் தன் நண்பிகளிடம் வெளிப்படுத்தும் அபிப்ராயம். “வாட் அ பியாச் ஷி இஸ்” என்று கெட்ட வார்த்தையைச் சாதாரண வார்த்தையாக மாற்றி, அவள் குறித்துத் தன் நண்பர்களிடம் புலம்புவான் அவன்.

இருவருக்கும், கருத்து பேதம் வராத நாட்களேயில்லையெனக் கூறிவிடலாம். ஒரு முறை ஆஃபீஸ் லஞ்ச் ரூமில், உரத்த  தொனியில் இருவரும் சண்டையிட்டுக் கொள்ள, அலுவலகமே முழுவதும் வேடிக்கை பார்த்தது. இருவருக்கும் மேனேஜரான, அறுபது வயதைக் கடந்த ஜிம் இருவரையும் தனித் தனியே கூப்பிட்டு அறிவுரை சொன்னார். இருவரும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒருவரையொருவர் குறித்துத் தரக் குறைவாகப் பொறிந்து தள்ளினர். ஜிம்’இன் மெச்சூரிட்டியும், பொறுமையும் அவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம் தரச் செய்தது. இந்த நிகழ்வுக்குப் பின்னர், இருவரும் சற்றுக் கட்டுப்படுத்திக் கொண்டு வேலையைத் தொடர்ந்தனர். சில தினங்கள் சண்டையில்லாமல் தொடர, இன்னொரு முறை ஏதோ வேலை குறித்து விஷ்வா’வின் க்யூபில் விவாதமாகத் தொடங்கிய பேச்சு, விரிவடைந்து ஒருவரை ஒருவர் மரியாதையில்லாமல் ஏசும் பேச்சாக மாறியது. இதனையும் பலர் வேடிக்கை பார்க்க, மீண்டும் ஜிம்’இன் ரூமில் மத்யஸ்தம். இந்த முறை ஜிம் இருவரையும் ஒன்றாக அழைத்துப் பேசத் தொடங்கினார்.

“யூ போத் ஆர் வெரி குட் எம்ப்ளாயீஸ்… போத் ஆர் டேலண்ட்டட்…  யூ ஆர் இண்டிவிஜுவலி க்ரேட் சக்ஸஸ்ஸஸ்… பட் டுகெதர் எ டிஸாஸ்ட்டர்… அன்லஸ் யூ டூ வொர்க் திஸ் அவுட் ஸூன், ஐம் கோயிங்க் டு ஹாவ் டு டேக் யூ டு ஹெச். ஆர்.” அவர் சொன்னதன் பொருள், அவர்களுக்கு வேலை போவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதே. இதனைப் புரிந்து கொண்ட இருவரும், சற்றே நிலைமையை உணர்ந்தவர்களாக, ஜிம்’இன் அட்வைஸிற்காக அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். ஜிம் சற்று இடைவெளி விட்டு, மெதுவாக, “ஒய் டோண்ட் யூ கோ அவுட் ஆஃப் ஆஃபீஸ் என்வயர்ன்மெண்ட் அண்ட் டாக் இட் அவுட்?… பெர்ஹாப்ஸ் லஞ்ச்… ஹாப்பி ஹவர்?….”. ஜிம்’இன் இந்த வார்த்தை அவரைப் பின்னாளில் ஸ்டுப்பிட் க்யுப்பிடாக மாற்றுமென்று அவர் சற்றும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

வேண்டா வெறுப்பாகத் தொடங்கிய ஹேப்பி  ஹவர், ஒரு சில மது பானங்களுக்குப் பின்னர் சற்று திசை மாறத் தொடங்கியிருந்தது. பர்ஸெனல் விஷயங்கள் குறித்துப் பேசத் தொடங்க, விஷ்வா கவிதை எழுதுவான் என்ற விஷயம் வெளிவந்தது. கேட்டவுடன் அவள் தான் ஒரு பாடகி என்ற விஷயத்தைப் பகிர்ந்தாள். நிறையப் பாடல்களைத் தானே எழுதி, பாடியுமிருப்பதாகச் சொல்ல, அவள் மேல் அவனுக்கு நாட்டம் தொடங்கியது. “யூ ஷுட் கம் ஓவர் டு மை அபார்ட்மெண்ட் அண்ட் ஸீ மை க்ரியேஷன்ஸ், சம் டைம்ஸ்” என்று சாதாரணமாகச் சொல்ல, விஷ்வாவின் போதையேறிய மூளையில் அது வேறுவிதமான அழைப்பாகத் தைத்தது. “வெல்…. ஐ வுட்… பட் யூ காண்ட் ரெஸிஸ்ட் மீ….. லேட்டர்…….” என இரட்டையர்த்தத்துடன் சொல்லிச் சிரித்தான்… அவளும் சற்றுக் கேலியாக முகத்தை வைத்துக் கொண்டு, “யா…ரைட்… டைகர்…” என்று சொல்லிவிட்டு, அமெரிக்கனுக்கே உரிய, அச்சில் ஏற்ற இயலாத, ஒரு ஸர்க்காஸ்ட்டிக் காமெண்ட் அடித்தாள். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் திகைக்க, இருவரும் சற்றே சங்கோஜ மௌனத்துடன் அங்கிருந்து எழுந்து புறப்படத் தயாராயினர்.

வீட்டிற்கு வந்த விஷ்வாவிற்கு, அவளின் ஸர்க்காஸ்டிக் காமெண்ட் மனம் முழுதும் ரீப்ளே ஆகிக் கொண்டிருந்தது. சாதாரண நிலையில், அந்த காமெண்ட்டிற்குக் கோபம் வந்திருக்க வேண்டும், அல்லது ’ஜஸ்ட் அ ட்ரங்கன் டாக்’ என்று சட்டை செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், விஷ்வாவிற்கு அவனையுமறியாமல் அது ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியது…. அவனையுமறியாமல் அவளைப் பற்றி நினைக்கத் தொடங்கினான். பேசும்பொழுது, அவளின் காதுகளில் ஆடிய அந்தப் பெரிய வளையம் தொடங்கி, அவனுக்குப் பிடித்தது போலவே மிகவும் குறைவாக நளினமாகப் பூசப்பட்ட அந்த லிப்ஸ்டிக்கில் இறங்கி, மேலிரண்டு பட்டன்கள் கழட்டப்பட்ட வெள்ளை நிற சட்டையும் அவை வெளிக்காட்டும் மன்மத மேடுகளும் அவன் உள் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின… அமெரிக்காவில் வந்து சில வருடங்கள் கடந்து, வெள்ளைத் தோலுள்ள பலரின் நட்பிருப்பினும், இவ்வளவு மென்மையான நளினங்களை இவ்வளவு அருகில் பார்ப்பது இதுவே முதல் முறையென்பதால் முழுவதுமாக தன்னையே இழந்து விட்டிருந்தான்.

அவளும் அதே நேரத்தில் அவளின் அப்பார்ட்மெண்டில் அதையே நினைத்துக் கொண்டிருந்தாள். ஹவ் குட் ஐ ஹேவ் ஸெட் சம்திங்க் லைக் தட்…. வி வெர் ஃபைட்டிங்க் லைக் கேட்ஸ் அண்ட் டாக்ஸ் அண்ட்டில் ஃப்யூ அவர்ஸ் அகோ… அண்ட் நௌ திஸ் ஸெக்ஸி ரெஃபரன்ஸ்…. நினைத்துப் பார்க்கையில், அவளால் சற்றும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனாலும், ஏதோவொரு மகிழ்ச்சி…. ஏதோவொரு ஆர்வம்.. ஏதோவொரு…. ஏதோவொரு காதல்? நோ நோ… நோ வே…. ஐ ஹேட் ஹிம்…. வெல், ரியல்லி? டு ஐ? ஹி ஸீம்ஸ் டு பி அ ஸ்வீட் கய்…. அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவசர அவசரமாக கிட்சனுக்குச் சென்று, வைன் கூலரைத் திறந்து தனக்குப் பிடித்த பீனோ கிரிஜோவைத் திறந்து ஒரு க்ளாஸ் நிரப்பிக் கொண்டாள். அதனை ஸிப் செய்து கொண்டே, தனது நண்பி பெத் ‘க்கு கால் செய்யலாம் என்று முடிவு செய்தாள். “அனைத்தையும் கேட்ட பெத், “நோ வே… டோண்ட் ஈவன் கிவ் ரூம் ஃபார் தட் திங்க்கிங்க்… ப்ளேம் இட் ஆன் தெ வைன் அண்ட் மூவ் ஆன்” என்று அட்வைஸ் செய்தாள். ஃபோனை வைத்தவுடன் இன்னும் திருப்தியடையாத டெப்ரா, பல முறை யோசித்து, அவனிடம் பேசிவிடுவது என்று முடிவு செய்தாள். என்ன பேசுவது என்று யோசிக்க, “லெட்ஸ் ஜஸ்ட் கால் ஹிம் அண்ட் அபாலஜைஸ்” என்று முடிவு செய்து, உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கினாள். மிட் நைட்டைத் தாண்டியிருந்த, நெருங்கிய உறவுகளுக்கே ஃபோன் செய்ய யோசிக்கும் அந்த நேரத்தில், இறங்கியிருந்த ஆல்கஹாலும், பேசியதால் வந்த குற்ற உணர்வும், அதற்கும் மீறிய ஒரு ஈர்ப்பும் அவளைத் தயங்காமல் ஃபோன் செய்யச் செய்தன.

வாட்… ரியல்லி… அவகிட்ட இருந்து ஃபோனா? தனது ஃபோனின் காலர் ஐ.டி. அவள் பெயர் காட்டுவதைப் பார்த்து யோசித்த விஷ்வா, இது நிஜந்தானா, இல்ல ரொம்ப தண்ணியடிச்சதுனால அப்படித் தெரியுதா என்ற குழப்பத்திலிருந்தான். தொடர்ந்து ஃபோன் மணி அடிக்க, நிஜந்தான் என்று உறுதி செய்து கொண்டு, ஃபோனை எடுத்து ஹலோ என்றான். “ஹை விஷ்… திஸ் இஸ் டெபி….” என்று தன் நெருக்கமான நண்பர்களிடம் கூறும் செல்லப் பெயரைச் சொல்லித் தொடங்கினாள். இதற்கு முன்னர் அவள் தன்னை “டெபி” என்று சொல்லி அவன் கேட்டதில்லை. எப்பொழுதும் ‘டெப்ரா’ தான். அந்தப் பெயரைக் கேட்டவுடன், அந்த போதையிலும் அவனுக்கு அவள் நெருக்கமாவது புரிந்தது. “ஹே… லிஸன்… ஐ ஷுட்ன்’ட் ஹேவ் ஸெட் தட்…..” என்று அவள் முடிக்குமுன், “ஸெட் வாட்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான். அவளும் சற்று நாணமுற்று, “யூ நோ……. ஸாரி…” என்று தொடர்ந்தாள். “டோண்ட் பி ஸில்லி டெப்…. ஐ டிண்ட் டேக் இட் அஃபன்ஸிவ்… இன் ஃபேக்ட் இட் கைண்டா டர்ண்ட் மி ஆன்….” என்று சொல்லிவிட்டு அடுத்த கணமே நாக்கைக் கடித்துக் கொண்டான்… “ஸாரி… டிண்ட் மீன் இட் தட் வே…” என்று இழுக்க, அவனின் தவறு தனது தவறைச் சரியாக்குவதாக உணர்ந்த டெப்ரா பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினாள்.

இப்படித் தொடங்கிய அவர்களது உறவு, கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. தினமும் தொலைபேசியில் பேசத் தொடங்கியிருந்தனர். அடிக்கடி டெக்ஸ்ட் செய்து கொள்ளத் தொடங்கினர். வாரமொரு முறை ஹேப்பி ஹவர்…. வாரமொரு முறை லஞ்ச் எனத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் ஆஃபிஸ் சூழ்நிலை இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளாமல் இருக்க இயலாது என்ற நிலைக்கு வந்து விட்டிருந்தனர். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஏற்கனவே கூறியதுபோல, அவனை அவளின் அப்பார்ட்மெண்டிற்கு ஒரு வெள்ளி இரவுச் சாப்பாட்டிற்காக அழைத்தாள். அழைத்த மறு நொடியிலிருந்து, அங்கே செல்வது குறித்துத் திட்டமிடத் தொடங்கினான். என்ன உடையணிய வேண்டுமென்று தொடங்கி, எல்லா விதமான விஷயங்களிலும் கவனம் செலுத்தினான். ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்த அனுபவத்திலிருந்து, ஒரு சில அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களையும் தயார் செய்து கொண்டான். அன்றைய தினம் அவனுக்கு இருந்த பதைபதைப்பு, காதல் செய்தவர்கள் மட்டுமே விளங்கிக் கொள்ளக்கூடிய ஒன்று.

எல்லாவற்றையும் ரெடி செய்து கொண்டு அவள் வீட்டிற்குச் செல்கையில், ஒரு பத்துப் பதினைந்து நிமிடம் கால தாமதமானது. அமெரிக்கர்களுக்கே உரித்தான காலம் தவறாமை மனதில் உறுத்த, காரில் போகும் வழியிலேயே அவளை ஃபோனில் அழைத்து லேட் எனக் கூறிவிடலாமென முடிவெடுத்தான். அடுத்த முனையில் ஃபோன் எடுத்த டெப்ரா, “தேங்க் காட்… ஐ’ம் ஆல்ஸோ ரன்னிங் லேட்…. ஸ்டில் இன் த பாத் டப்..” என்று சொல்ல, அதைக் கேட்ட மாத்திரத்தில் கார் ஓட்டிக் கொண்டிருக்கையிலேயே காய்ச்சல் அடிக்கத் தொடங்கி விட்டது. அவளை பாத் டப்’பில் கற்பனை செய்து கொண்டே கார் ஓட்டிச் சென்றவனுக்கு, மாடஸ்ட்’டாக அவள் முன்னர் நிற்பதற்கு சில ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

வீட்டிற்குள் நுழைய அவனை வரவேற்ற அந்த கேண்டில் வாசனை, அவனை முழுவதுமாகக் கிறங்கடித்தது. உடனே வந்து அவனை ஹக் செய்த அவளின் வாசனை, அவனை சொர்க்கபுரிக்கே இட்டுச் சென்றது. ‘ஹக்’ செய்வதற்கு வேண்டிய சில எடிக்வேட்’ஐ அறிந்தவன் என்றாலும், ஸ்பரிஸத்தை உணரும் ஆசையில் அந்த எடிக்வேட்ஸ் தெரியாதது போலவே நடந்து கொண்டான். அவனது காய்ச்சலின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்ல, அவள் சர்வ் செய்த வைன் இன்னும் அதிகப்படுத்தும் விதமாக அமைந்தது. இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு, இருவருமே தங்களை இழக்க, அவளின் படுக்கையறையில், திருமணத்திற்கு முன்னரே ஒன்றிப் போயிருந்தனர். விஷ்வா’வுக்கு அதுவே முதல் முறை. வெஸ்டர்ன் கல்ச்சரில் வளர்ந்த டெப்ரா’வுக்கு அது முதல் முறையல்ல, அதனையும் அவனிடம் ’மேட்டர் ஆஃப் ஃபேக்ட்டாக’ சொல்லவும் தயங்கவில்லை.

—————————————————————————

யூ நோ…. மை மாம் இஸிண்ட் டூ த்ரில்ட் அபவுட் யூ அண்ட் மி ஹேங்கிங் அவுட் டுகெதர்….” அப்பார்ட்மெண்டில் அந்த முதல் நாள் இரவைக் கழித்தபிறகு, அது தினசரி வாடிக்கையாகி விட்டிருந்தது. பல இடங்களுக்கும் ஒன்றாகப் போகத் தொடங்கினர். மொத்த ஆஃபீஸும், கீரியும் பாம்பும் எப்படி இப்படி நண்பர்களாயினர் என்று ஆச்சரியப்படத் தொடங்கினர். டெப்ராவின் நண்பி பெத்’ஆல் இதை நம்பவே முடியவில்லை. அவர்களின் மேனேஜர் ஜிம் கூட தானே தவறு செய்து விட்டதாக எண்ணத் தொடங்கினார். இத்தனையும் நடந்த பிறகு பக்கத்து ஊரில் வசிக்கும் அம்மாவிற்குத் தெரியாமல் இருக்குமா? அவர்களுக்குத் தெரிந்த பின்னர், வீட்டில் ஒரே வாக்குவாதம். என்னதான் ஓபன் கல்ச்சர் என்று சொல்லிக் கொண்டாலும், அம்மாக்களுக்குப் பெண்களின்மேல் உள்ள அக்கறையில் எந்த வேறுபாடும் இல்லை. “ஹி இஸ் ஃப்ரம் டிஃபரண்ட் கல்ச்சர், ப்ராக்டிஸ், பிலிஃப்ஸ்…. ஐ டோண்ட் திங்க் திஸ் வில் வொர்க் அவுட்” அவள் அம்மாவின் எதிர்ப்புத் தொடர்ந்தது; அவர்களுக்குச் சொல்லாமல், இவர்களிருவரும் தினம் சந்தித்துக் கொண்டிருந்தனர். அவன் கிட்டத்தட்ட அவளது அப்பார்ட்மெண்டிலேயே வாழ்ந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவிலேயே ‘லிவிங்க் டுகெதர்’ கான்ஸப்ட் வந்தபின்னர், அமெரிக்காவில் கேட்க வேண்டுமா…?

அவள் இவ்வாறு சொல்லும் போதெல்லாம், விஷ்வா’வும், “ஐ நோ… ஐ நோ…” என்று இழுப்பான். மனதிற்குள் தனது அம்மா, அப்பாவின் நினைப்புத்தான். தினமும் காலையில் எழுந்து, மடி மடியாக ஸ்னானம் செய்துவிட்டு, தலை காய வேண்டுமென்பதற்காகத் துண்டைக் கட்டிக் கொண்டு, துளசி மாடத்தை வலம் வரும் அம்மா மனக்கண்முன். “மங்களம் மாமி பாக்கறத்துக்கு மகா லக்‌ஷ்மியாட்டமா…” சொல்லாத மாமிகளே இல்லை அந்த அக்கிரகாரத்தில். அப்பா இறை பக்தியும், தன் மதத்தின் மேல் அதிக நம்பிக்கையும் கொண்டவர். சென்ற முறை இவர்கள் அமெரிக்கா வந்தபோது டெப்ராவை அறிமுகம் செய்து வைத்திருந்தான். பெற்றோரையும், டெப்ராவையும் ஒரு தமிழ்த் திரைப்படம்  பார்ப்பதற்கு அழைத்துச் சென்றிருந்தான். அவளுக்குக் கதையையும், வசனங்களையும் விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டிருந்தது. ஏதோ உடன் வேலை செய்யும் ஒரு பெண்மணி என்றுதான் அவர்கள் நினைத்திருப்பர்.

————————————————————-

நாளை தேங்க்ஸ்கிவிங்க்… அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேரும் திருநாள். டெப்ரா நூறு மைல் தொலைவிலுள்ள பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல இருக்கிறாள். பெரியப்பா, சித்தப்பா, அத்தை, சித்தி அவர்களின் குடும்பங்கள் என எல்லோரும் ஒன்று கூடும் சந்தோஷம். ஆனாலும், விஷ்வாவை விட்டுவிட்டுச் செல்ல வேண்டுமேயென்று அவளுக்குத் துயர். விஷ்வா’வும் துயரப்பட்டாலும், இது மிகவும் முக்கியமான பண்டிகை என்று ‘பை’ சொல்லத் தயாராக இருந்தான்.

அருகில் அமர்ந்த டெப்ரா, “ஹே… ஐ டோண்ட் நோ ஹவ் ஐ வில் பி வித்தவுட் யூ ஃபார் ஃபோர் டேஸ்” என்று சொல்லி அவன் தோள்மேல் சாய்ந்தாள். அவள் சொல்வதும் நிஜம் தான். இவர்களிருவரும் ஒன்றாகப் பழக ஆரம்பித்ததும் தினம் பார்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். வெளியூர் எவற்றிற்கும் சென்றதுமில்லை. அலுவலக வேலையாக வெளியூர் சென்றாலும், இருவரும் ஒன்றாகவே சென்றனர். பிரிவுத் துயர் என்பதை முதன் முறையாக அணுகுவதால் அவளுக்கு அந்த ஃபீலிங்க்ஸ்….

“இட் வில் பி ஆல்ரைட் ஹனி….” சொல்லிக் கொண்டே அவளின் இதழை மீண்டும் கவ்வ, இந்த முறை அவளும் கிறங்க, “ஒன் ஃபார் த ரோட்” என்று துள்ளிக் குதித்துக் கொண்டே அவனைக் கை பிடித்து அழைத்துக் கொண்டு படுக்கையறை சென்றாள்…

————————————————————-

மை பேபி….”  வீட்டிற்குள் நுழையும் மகளைப் பாசமாக அணைத்து உள்ளே அழைத்துச் சென்றாள் சேண்டி. தினமும் ஃபோன் பேசிக் கொண்டாலும், நேரில் பார்க்கும்பொழுது பரிமாறிக் கொள்ளப் பல விஷயங்கள் இருக்கத் தானே செய்யும். தந்தை ஸ்டீவ்’உம் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க, ஒருவர் பின்னால் ஒருவர் என அனைத்து உறவினர்களும் அஸெம்பிள் ஆகத் தொடங்கினர்.

குதூகலமாக நாள் நகர்ந்து கொண்டிருந்தாலும், டெப்ரா விஷ்வாவை மிஸ் செய்து கொண்டிருந்தாள். ஆயிரம் மனிதர்களுக்கு மத்தியிலும் தனிமையாக உணர வேண்டுமெனில், காதலித்துப் பாருங்கள் என்று யாரோ சொன்னதாக நினைவு. இதற்கு நடமாடும் உதாரணம் டெப்ரா. மனது முழுவதும் அவனையே வைத்து மருகிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தேங்க்ஸ்கிவிங்க் ட்ரெடிஷனும் தொடர்ந்து கொண்டிருக்க, நீளமான டின்னர் டேபிளில் அனைத்துப் பண்டங்களும் அழகாக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவராக அனைத்து உறவினர்களும் வந்து சேர, கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பேர் அந்த டேபிளைச் சுற்றி அமர்ந்தனர். அனைவரும் சாப்பிடத் தயாரானார்கள். ப்ரேயர் சொல்லப் போகிறார்கள் என்று டெப்ரா நினைக்கையில், அவளின் அம்மா ‘ஒன் மினிட்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சமையலறைக்குள் சென்றாள்.

சற்று எதிர்பாராமல் நடந்த இதனைப் பார்த்துக் கொண்டிருந்த டெப்ரா, அம்மா திரும்பி வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் திரும்பி வந்த அம்மாவையும், அம்மாவின் அருகில் உடன் வந்தவனையும் பார்த்த டெப்ரா, அதிர்ச்சியில் உறைந்தே போனாள். அம்மா, டக்ஸிடோ அணிந்து கொண்டு சூப்பர் ஸ்மார்ட்டாக அம்மா அருகே நின்று கொண்டிருந்தவன் “விஷ்வா”……

“ஸர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ரைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” எனக் கூடியிருந்த அனைத்து உறவினர்களும் கூக்குரலிட, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை அவளுக்கு. அவள் வாயடைத்துப் போயிருந்த அந்த வினாடி, அவளருகே வந்த விஷ்வா, சற்றும் எதிர்பாராத வகையில், மண்டியிட்டு, தன் இடது கையில் தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை நீட்டி, “வில் யூ மேரி மீ?” எனக் கேட்க, டெப்ராவின் காலடியில் பூமிப் பந்து மணிக்கு அறுபது மைல் வேகத்தில் சுழலத் தொடங்கியது…

யெஸ் டியர்….. விஷ் ஸ்போக் டு மி ஃப்யூ டைம்ஸ்…. விஸிடட் அஸ் கபுள் ஆஃப் டைம்ஸ்.. வி அண்டர்ஸ்டுட் ஹவ் மச் ஹி லவ்ஸ் யூ…. அண்ட் ஹவ் மச் யூ மீன் டு ஹிம்….. அண்ட் வி லவ்ட் ஹிஸ் அப்ரோச் ஆஃப் ஆஸ்க்கிங்க் அவர் பர்மிஷன் ஃபர்ஸ்ட்… திஸ் இஸ் ப்ராபப்ளி த ஃபர்ஸ்ட் எவர் அமெரிக்கன் ப்ரபோஸல் தட் கெட்ஸ் பேரண்ட்ஸ் கன்ஸெண்ட் ஃபர்ஸ்ட்.. தெர் வாஸ் நோ ரீஸன் ஃபார் மி டு பி வொர்ரிட் அபவுட் எனிதிங்க்…. அண்ட் வி ஸெட் யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”, சேண்டி நிறுத்தாமல் விளக்கி முடித்தாள்.

டெப்ராவின் காதுகளை அவளாலேயே நம்ப முடியவில்லை… நடப்பது எல்லாம் உண்மையா என்று நினைத்துக் கொண்டே அமைதியாய் இருந்தவளின் காதுகளில், பக்கத்து ரூமில் அம்மாவின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அம்மா ஃபேஸ் டைமில் விஷ்வா’வின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். “யெஸ்… ஹி ஃபைனலி ப்ரபோஸ்ட் அண்ட் மை டாட்டர் ஸெட் யெஸ் டூ” நேர்முக வர்ணனைக் கொடுத்துக் கொண்டே “டெப்ரா இஸ் லக்கி” என்று இவர் சொல்ல, ஃபோனின் மறு முனையில் மங்களம் மாமி, “நோ நோ சேண்டி…. அவர் விஷ்வா இஸ் ஸோ லக்கி” என்று சொல்வது தெளிவாகக் கேட்டது.

“வெர் இஸ் தட் கய், ஐ நீட் ஸம் ப்ரைவஸி நௌ” என்று மனதில் நினைத்துக் கொண்டே சுற்றுமுற்றும் தேடலானாள். கூட்டத்திலிருந்து நைஸாக நழுவி மெதுவாக பெட் ரூம் நோக்கி நடந்து செல்லும் விஷ்வாவைப் பின் தொடர்ந்த டெப்ரா தனக்குக்குள்ளேயேசொல்லிக் கொண்டது”திஸ் இஸ் த பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்” !!!

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad