\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

யாக்கை நிலையாமை

Filed in இலக்கியம், கவிதை by on May 31, 2013 0 Comments

yaakkai_425x282பகலவன் எழுந்தாட

பனித்துளி பறந்தது

 

புள்ளினம் இசைபாட

புதுதினம் உதித்தது

 

கடிகாரம் வசைபாட

கனவு கலைந்தது

 

கண்விழி மலர்ந்தாட

கடமை தெரிந்தது

 

மழலைகள் விழித்திட

மன்றாடல் வளர்ந்தது

 

அலுவல்கள் நினைந்திட

அயர்ச்சி தெறித்தது

 

இன்னல்கள் அளவிட

இன்பம் மறைந்தது

 

அனுதினம் தொடர்ந்திட

அண்டம் கசந்தது

 

மற்றொரு தினமது

மலர்ச்சி தொடர்ந்தது

 

கதிரவன் வந்திட

புள்ளினம் இசைத்திட

 

கடிகாரம் ஒலித்திட

கண்விழிக்க மறுத்திட்ட,

 

செய்தி சொன்னவன்

செய்தி ஆகிப்போனான்

 

உயிரதைக் கவர்ந்திட

உறவது அழுதது

 

நிதமது தொடர்ந்திட

நிதர்சனம் விளங்குது!!!

வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad