\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வெண்ணெய் இனிப்பு (Butter Cookie)

நத்தார் பண்டிகை காலமென்றால் ஸ்கந்திநேவிய மக்களுக்கு அகலடுப்புகளில் பற்பல இனிப்புப் பண்டங்கள் ஆக்கும் காலம் எனலாம். கீழே இலகுவான வெண்ணெய் இனிப்புத் தயாரிப்பு முறை தரப்பட்டுள்ளது.

தேவையானவை

2 கோப்பை மிருதுவான வெண்ணெய்

1 கோப்பை மண்ணிறச் சீனி (brown sugar)

4 கோப்பை கோதுமை மா (All purpose flour)

தேவையானால் உணவு நிறங்கள், நறுமண வனிலா, பாதாம் பருப்பு தைலம், இனிப்புத் தூவல்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை

முதலில்  அனலடுப்பை (conventional oven) 325 பாகை ஃபரனைட்டிற்கு வெப்பமேற்றவும் (Pre-heat). வெண்ணெய், சீனியை மசித்துத் தொடர்ந்து கலக்கி மிருதுவான பதத்திற்குக் கொண்டு வரவும். அடுத்து நான்கு பாகங்களாக கோதுமை மாவைப் பிரித்து, அதில் மூன்று பாகங்களை நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ளவும். குழைத்த மாவை, உள்ளங்கையில் சிறிது இட்டு, சுமார் ½ அங்குல வட்டத் தட்டுக்களாக அமைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு ஆக்கி எடுத்துக் கொண்ட பெரும் நாணயங்கள் போன்ற தட்டுக்களை உலர்ந்த அனலடுப்புத் தட்டில் (Cookie sheet) தட்டையான கரண்டியால் பக்குவமாக  எடுத்து அடுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து 325 பாகை அனலடுப்பில் சுமார் 15 நிமிடங்கள் வரை சுட்டு எடுத்து, காற்றோட்டமுள்ள இடத்தில் கம்பித்தட்டில் (wire rack) ஆற வைக்கவும்.

வேண்டுமானால் தின்பண்ட நிறங்கள் சேர்த்த  ஐஸிங் அலங்காரங்கள், இனிப்புத் தூவல்கள் இட்டுப் பரிமாறலாம். மேலே தரப்பட்ட கலவைப் பொருட்கள் சுமார் 48-50 இனிப்புக்களை உருவாக்கும்.

தொகுப்பு – யோகி

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad