\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நான் நானில்லை

Filed in கவிதை, வார வெளியீடு by on February 18, 2019 0 Comments

நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே
நீங்கள்
அதுவல்ல நான்!

வரிக்கிறீர்களே என்னைப்பற்றி
அதுவல்ல நான்!

வசப்பட்டதில்
வசித்துக்கொண்டிருக்கிறேனே
அதுவுமல்ல நான்!

என் சிறகுகளை
பார்த்திருக்க முடியாது நீங்கள்.
ஏனெனில்
அவை முழுமையாய்
விரிக்கப்பட விடவேயில்லை!

ஒருவேளை கட்டுக்களை
விடுவித்து என் சிறகுகளை
விரித்திருந்தால்

நான் யாரென பாதியாவது
தெரிந்திருக்கும்!

நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே
நீங்கள்
அதுவல்ல நான்!

– ருக்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad