\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சொற்சதுக்கம் 8

கீழே கட்டத்துக்குள் இருக்கும்  பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!

  1. கழுத்தில் அணியும் அணிகலன்   _____   _____ _____
  2. அச்சம் என்பதற்கு இன்னொரு சொல்   _____   _____ _____
  3. கிரந்தமில்லாத காய்ச்சல்  _____ _____ _____
  4. தண்டவாளம் அல்லது பாதை என்று பொருள் கொள்ளலாம் _____   _____ _____
  5. வீடுகளில் பொருட்களை அடுக்கி வைக்கும் உயரமான இடம் _____   _____ _____
  6. நூறு என்பதைக் குறிக்கும் வடமொழிச் சொல் _____   _____ _____
  7. மிளகாயின் சுவை  _____   _____ _____   
  8. தூரத்தைக் கணக்கிடும் பழங்காலத் தமிழ் அளவீட்டு முறை    _____   _____ _____  
  9. கத்தரி வகையைச் சார்ந்த இந்தக் காய் மிகச் சிறந்த மூலிகையாகும் _____   _____ _____
  10. விளையாட்டுக்களுக்கு பயன்படும் உருட்டி அல்லது சுண்டி எறியும் பொருள் _____   _____ _____  
  11. எதிரிகளின் சமர் எளிய பாணியில்    _____ _____ _____
  12. ராசிகளில் ஒன்றான நண்டு _____   _____ _____ ______
  13. உயிர் இல்லாத உடலை இப்படிச் சொல்வார்கள் _____   _____ _____   _____
  14. இந்து கோயில்களின் கோபுர உச்சியில் பொருத்தப்படும் உறுப்பு. கும்பாபிஷேகத்தின் போது மாற்றுவார்கள்  _____   _____ _____   _____
  15. இந்தச் சொல்லுக்கு பயன் கிடையாது என்ற பொதுவான பொருள் இருந்தாலும் இதன் முதற்பொருள் அபராதம்   _____   _____ _____ _____  
  16. அதிக விலையில்லாத  உலோகம் _____   _____ _____   _____
  17. நடக்கப் போவதைக் கணித்துக் கூறும் முறை _____   _____ _____   _____
  18.  பொதுவாக ஒரு பொருளை, குறிப்பாக உணவுப்பொருளை இப்படி குறிக்கலாம்  _____   _____ _____   _____
  19. பெரும்பாலும் கடலால் சூழப்பட்ட மிகப்பெரிய தொடர் நிலப்பகுதி _____   _____ _____   _____
  20. பூமிக்கு மேல் விரிந்திருக்கும் அகண்ட பரந்தவெளி     _____   _____ _____   _____
  21. சிறு பாத்திரத்தைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்  _____   _____ _____   _____
  22. நிலையற்ற, தடுமாறும் மனநிலை _____   _____ _____   _____
  23. எளிது என்பதைக் குறிக்கும் சொல் _____   _____ _____   _____
  24. கோவிலை இப்படியும் குறிப்பிடலாம்     _____   _____ _____   _____
  25. கள்ளம்  _____   _____ _____   _____  அற்றவர்கள் திருட்டுத்தனமும், பித்தலாட்டமும் செய்யாதவர்கள்
  26. இறைவனைச் சென்றடையும் வழிமுறைகளை விளக்கும் சம்ஸ்கிருத நூல்  _____   _____ _____   _____
  27. உதவி என்பதனை குறிக்கும் காயம் செய்யாத சொல் _____   _____ _____   _____
  28. காரியம் என்பதைக் குறிக்கும் இச்சொல் இழிசெயல் என்பதைக் குறிக்கவும் உதவுகிறது _____   _____ _____   _____
  29. இதை மிருதுவாக வைத்துக் கொள்ள பல களிம்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. _____   _____ _____   _____
  30. நற்செயலான இது தலையையும் காக்குமாம் _____   _____ _____   _____
  31. தமிழர் நிலத்திணைகளில் ஒன்று _____   _____ _____   _____
  32. பாரம்பரிய நாட்டிய வகைகளுல் ஒன்று _____  _____ _____ _____
  33. நாட்டுப்புறங்களில் இந்தக் குடத்தைத் தலையில் வைத்து ஆடுவர் _____   _____ _____ _____
  34. உடன்பட்டு இசைவைத் தெரிவித்தல் _____   _____ _____   _____ _____
  35. தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வாசுகிப் பாம்பு கக்கிய விஷம் _____   _____ _____  ______ ______
  36. _____   _____ _____   _____ _____ என்றால் அன்பு, கருணை எனப் பொருள் கொள்ளலாம்.
  37. காடு என்ற பொருள் தரும் இச்சொல் கம்ப ராமாயணத்தின் ஒரு காண்டமாக உள்ளது. _____   _____ _____   _____ _____
  38. மளிகை போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் இடம்   _____ _____ _____ _____ _____
  39. இது சாட்டையின் உதவியோடு சுழலும்    _____   _____ _____   _____ _____
  40. இணக்கம் என்ற சொல்லுக்கு மாற்றுச்சொல் _____   _____ _____   _____ _____
  41. சிற்றுண்டி _____   _____ _____   _____ _____
  42. இந்தியாவின் தேசிய மரம் _____   _____ _____   _____ _____
  43. பச்சை நவரத்தினக் கல் _____   _____ _____ _____ _____
  44. தொடர்ச்சியான 48 நாட்களைக் குறிக்கவும், ஒரு பிராந்தியத்தைக் குறிக்கவும் பயன்படும் சொல் _____   _____ _____   _____ _____
  45. திருமணம் மற்றும் பல விழாக்கள் நடைபெறும் பெரிய இடம் _____   _____ _____   _____ _____
  46. தொடக்கம் என்பதற்கு மாற்றுச் சொல் _____   _____ _____   _____ _____
  47. பகட்டு, படாடோபம் வரிசையில் இதையும் சொல்லலாம் _____   _____ _____ _____ _____
  48. பாம்பு, ஏணி கொண்ட ஒரு விளையாட்டின் பெயர் _____   _____ _____   _____ _____ _____  
  49. முழு திருப்தி அல்லது  மேலான பேரின்பம் _____   _____ _____   _____ _____ _____   
  50. தொன்று தொட்டே சென்ற இது திரும்ப வராது _____   _____ _____   _____ _____ _____   _____


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad