\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கயமைக்குக் கல்லடி

கடவுளரைப் பழித்திடும் கருங்காலிக் கூட்டமது
கண்ணியம் இன்றியே குரைப்பதும்  தொடர்ந்திடுது
கைகளில் ஒலிப்பெருக்கி கைதட்டச் சிறுகூட்டம்
கண்ணனின் லீலைகளைக் காலித்தனமாய்ப் பேசியது!

கருத்துத் தெளிவாய்க் கைகுவித்துக் கேட்டிட்டால்
கருணை பலகொண்டு கனிவாய் விளக்கிட
கடுந்தவம் புரிந்து கைங்கரியம் பலசெய்த
கடவுள்நிகர்ப் பெரியோர் கண்டம் முழுதுமுண்டு!!

கலகம் விளைவித்தால் கல்லா நிறையுமென்றும்
கண்மூடித் தாக்கிட்டால் கனகம் கிடைக்குமென்றும்
கடவுளரை ஏசிட்டால் கணக்கின்றிக் கொட்டுமென்றும்
காசொன்றே குறிக்கோளான கயவர்களை நிராகரிப்போம்!

கயவான சொல்லதற்குக் கருத்தாய் மறுப்புண்டோ
கதிகலங்கி நின்று கண்ணீர்விடும் பக்தர்கட்கு
கலக்கம் துடைக்கும் கருத்துடன் விளம்பிடுவோம்
கல்யாண குணங்களான கண்ணனை விளக்கிடுவோம்!!!

குழந்தையதன் வடிவத்திலே கடவுளையே உருவேற்றி
குவலயத்து மாந்தர்தம்மைக் கோபிகளாய் உருவகித்து
குதூகல ஆசையையும் குற்றமுள்ள நினைவதையும்
கும்பி நிறைத்திடவே குன்றெனச்செய்த பாவங்களையும்

கொச்சையான கோபத்தையும் கொண்டிருந்த மாசுக்களையும்
கொட்டிக்கிடந்த ஆடைகளாய்க் கொணர்ந்துவந்த உபமானமது!
கொற்றவனாய் அவதரித்து, கொன்றிட்டான் அவையனைத்துமெனக்
கொள்ளையழகுடன் விவரித்த கொஞ்சுமந்தக் கவிதையது!!

கடவுள் சிலையென்றால் கல்லென இழிந்துரைத்து
கருங்காலிகளின் சிலையதற்குக் கருத்தாய் மாலையணிவித்து
கருவறையில் இருப்பது கருங்கல் என்றோதி
கயவர்களைப் புதைத்திட்ட கல்லறைக்குத் துதிபாடி

கணக்கில்லாதோர் வணங்கிடும் கண்ணஜெயந்தியைக் கேலிபேசி
கணக்காய் அயோக்கியனின் கருபிறந்த நாள்துதித்து
கண்களில் பார்த்ததெல்லாம் கபளீகரம் செய்து
கயவுவாழ்வு வாழ்பவருக்குக் கருத்திது விளங்கிடாது!!

         வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad