ஹோலி 2019
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். வட மாநிலங்களில் இந்தப் பண்டிகையை வண்ண மயமாக, மிகவும் விமரிசையாக் கொண்டாடுகிறார்கள்.
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக!
Tags: holi 2019, மிலன் மந்திரில்