\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்காவும் அதன் அகால ஆசையும்

தமிழில் அகால மரணம் என்பது இயற்கையான இறப்பு இல்லை என்று பொருள்படும். தமிழ் மக்களில் ஈழத்து மக்களும், மலேசிய மக்களும் துப்பாக்கியின் பரிவிளைவுகளை அவர்கள் வாழ்நாட்களில் பார்த்தவர்கள், பார்த்துக்கொண்டு இருப்பவர்கூட. இன்று வட அமெரிக்க மண்ணில் வாழும் தமிழரும் அவ்வப்போது காணும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டனர் எனலாம்.

கடந்தவாரம் கூடி கொலராடோ மாநிலத்தில் 10 வருடங்களிற்கு முன்னர் நடைபெற்ற அகோரக் கொலம்பைன் பள்ளிக்கூடச் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு ஏழே ஏழு மயில்களிற்கப்பால் மீண்டும் இரண்டு மாணவர்கள் இன்னும் ஒரு பாடசாலையில் சூட்டுச் சம்பவம். புலம்பும் பெற்றார்,உற்றார் ஒரு பக்கம், இதைத் தீர்ப்போம் தீர்ப்போம் என்று அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் பொய்மை பேணும் முதுகெலும்பில்லா அரசியல்வாதிகள் இன்னொரு பக்கம். இடை நடுவில் பாதிப்புறும் மக்களோ இன்னும் சனநாயக முறையில் தமது நிலவரத்தை மாற்ற முடியாது நூறாண்டுகளாகத் தவிக்கின்றனர். இதற்கு அமெரிக்காவில் ஆயுத வர்த்தக சம்மேளனங்களும் அவர்களின் வர்த்தக-அரசியல் பரப்புரைகளுமே பிரதான காரணிகள்.

மினசோட்டாக் குறிப்பு

மாநிலச் சாசனத்தில் ஆயுதம் தூக்கல் மக்கள் உரிமை என்ற நிலைப்பாடு எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது இவ்விடம் குறிப்பிடத் தக்கது.

மேலும் மாநில உயர்நீதி மன்றம், அப்பேர்ப்பட்ட பொது உரிமையாக யாரும் கருதலாம் என்று இருப்பினும் அது நிச்சமாக அமுலாக்கப்படும் என்றில்லை என்று தெளிவு தந்துள்ளது.

மாநில சட்டசபைத் தோட்டாவுள்ள கைத்துப்பாக்கி கொண்டு போக அத்தாட்சிப் பத்திரம் வைத்திருக்கலாம் என்ற சட்டம் கொண்டு வந்தாலும், அந்த உரிமைக்கு உத்தரவாதம் தரப்படமாட்டாது என்று மினசோட்டா உயர்நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க மண்ணில் துப்பாக்கி முனையில் உயிரிழப்புக்கள் இன்றும் உலகிலேயே பெருமளவானது தான். 390 மில்லியன் துப்பாக்கிகள் 50 மில்லியன் அமெரிக்கர் வீடுகளில் உள்ளமை திகைப்புத்தரும் தகவலே. அமெரிக்காவில் 47.5% மாணவர் துவக்குடன் வளர்ந்தவர்கள். இது மறறைய உலக நாடுகளில் காணப்பெறாத ஒன்று எனலாம். இந்தத் தொகுப்புக் கட்டுரை ஏட்டிக்குப் போட்டி என்று அபிப்பிராயம் பேசிக் கொள்ளாமல் தரவு தகவல் ஆதாயங்கள் மூலம் அமெரிக்க அகால ஆசையை எடுத்துக் காட்ட முனைகிறது.

இந்த அகால கொல்லித் துப்பாக்கிகளை வைத்திருக்க ஆயிரம் காரணம் சொல்வர் இன்னாட்டு உரிமையாளர்கள். உலகில் கடும் ஆயுதம் உடைய பலமான பொலீஸ் படைகள் நகரிலும், ஊர்ப்புறத்திலும் இருப்பினும் உரிமையாளர் பிரதானமாக  76% வீதமானவர் கூறுவது தமது தற்பாதுகாப்புக்காம். இந்தப் பயப்பீதியில் 63% மற்றையவர்களிடம் இருந்து தம்மை மீட்டுக் கொள்ள என்கின்றனர். 40% சதவீதமானவர் வேட்டையாட என்கின்றனர்.

இந்தச் சித்த பிரேமையில் பாத விளைவுகள் பல அமெரிக்கச் சமூகத்திற்கு என்றும் ஆதாயமாக அமையவில்லை எனலாம். இதற்கான அத்தாட்சிகள் கட்டுரையின் இறுதிப் பகுதியில் தரப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பை அபிப்பிராயமாக மாத்திரம் இல்லாமல் புள்ளி விபரவியல் ரீதியில் பார்ப்போம். அமெரிக்காவில் யார், யார் தாம் இந்த உயிர்கொல்லி இயந்திரங்களைச் சேர்த்து வைத்துள்ளார்கள். 2015ம் ஆண்டு புள்ளியெடுப்பு ஆய்வின்படி 1994 இல் 44 மில்லியன் அமெரிக்கரும் 2015 இல் 55 மில்லியன் பிரசைகள் எனவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கக் குடித்தொகையில் வயதுக்கு வந்தவர்கள் 1994 இல் 25% வீதமும், 2015 இல் 22% வீதமானவரும் துவக்கைக் கொண்டுள்ளனர்.

அகால ஆயுதம் தாங்குவோர் தொகை

சராசரியாக துவக்கு உரிமையாளர் 2015 இல் இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தனர். ஆயினும் பொதுவாக 5 ஆயுதங்களை இன்று வைத்திருக்கின்றனர். இரண்டு தசாப்தங்களின் முன்னர் 4 ஆயுதங்களாக இருந்தது. அரைவாசி துவக்கு, மற்றும் அகால ஆயுதங்கள் 14% வீதமானவர்கள் உரிமை கொண்டாடுவர். இவர்கள் எண்ணிக்கை 7.6 மில்லியன். அமெரிக்க நாட்டின் சனத்தொகையின் 3% சதவீத பிரசைகள்.

துவக்கு வைத்திருப்பவர்களில் 8% சதவீதத்தினர் 10 மேற்பட்ட ஆயுதங்களைக் கொண்டுள்ளனர். இவர்களே இந்நாட்டில் 40% துவக்குகளை கொண்டவர்கள். மேற்கொண்டு பெரும் சேகரிப்பாளர் எனப்படுபவர் இதில் 3% சதவீதமானவர்கள். இவர்கள் 17 இற்கும் மேலான துப்பாக்கிகள் கொண்டவர்கள்.

ஆயுதத் திருட்டு

ஆயுதங்கள் சேகரிப்பது ஒரு சாரார், ஆனால் அந்த ஆயுதங்கள் திருடல் இன்னும் வரும் தலையிடி. பாதுகாப்புக் கணக்கெடுப்பின்படி 2005 இல் இருந்து 2010 வரை வெறும் 5 ஆண்டுகளில் வருடா வருடம் அமெரிக்காவில் தலா 250,000 துவக்குகள் திருடப்பட்டுள்ளன. 2015இல் 2.4% துவக்கு உரிமையாளர்கள் சென்ற 5 வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட துவக்குகள் தம்மிடம் இருந்து திருடப்பட்டன என்று ஒப்புக் கொண்டனர். 2010 இல் இருந்து 2015 வரை 2.5 மில்லியன் துவக்குகள் இந்நாட்டில் திருடப்பட்டன.

சேகரிப்போர் வாழ்விடம்

அமெரிக்காவில் நகரில் வாழ்பவர்களில் 15% சதவீதமானவர் துவக்கு வைத்திருக்கின்றனர். ஆயினும் நகருக்கு அயற்புறம் (Suburb) 19% வீதமும், நாட்டுப்புறம் 33% வீதமானோர் துவக்கை வைத்திருக்கின்றனர்.  அமெரிக்காவில் $100,000 மேற்பட்ட வருமானம் உள்ளவர்கள் 25% ஆயுதம் வைத்திருப்பவர். உழைப்பவர்கள் 24% துவக்கு உள்ளவர். $25,000 – $59,000 வருமானம் உள்ளவர்கள் 22% துவக்கு உள்ளவர். $25,000 குறைந்த வருமானம் உள்ளவர்கள் 13% துவக்குகளைக் கொண்டுள்ளனர்.

துப்பாக்கி வைத்திருப்பவர் இனம்

அமெரிக்காவில் வெள்ளையினத்தவர் 25 சத துப்பாக்கிளைக் கொண்டுள்ளனர். இலத்தீன் அல்லது ஹிஸ்பானிக் மக்கள் 16 சதவீதம். கறுப்பு அமெரிக்கர் 14%. 25% துப்பாக்கி வைத்திருப்பவர் கலவையின மக்கள். மீதி 8% இதர மக்கள் கொண்டுள்ளனர்.

அகாலம் அவசியமில்லை

அமெரிக்க மக்களில் 3 சதவீதமானவர்கள் ஆயுதம் தாங்கும் உரிமை, நாட்டின் 97% மக்கள் வாழ்வையும் பல வகையில் பாதிக்கிறது. நாம் அமெரிக்க செய்தித்தாள்களை எடுத்துப் பார்த்தால் ஆயுத இறப்புக்கள் மலிந்து காணப்படுகின்றன. 2015இல் அமெரிக்காவில் தற்கொலை 22, 018 ஆகும். வேண்டும் என்று சுட்டுக் கொலை 13,463. இதர எதிர்பாராத விபத்துக்கள் 1000 இற்கும் சற்றுக் குறைவு . இதே சமயம் துப்பாக்கியால் எற்பட்ட தாக்கல் காயங்கள் 60, 470 . துப்பாக்கி விபத்துக் காயங்கள் 15,928. தாமாகத் தமக்கு உருவாக்கிக் கொண்ட உடல் சேதக் காயங்கள் 3,320.

அமெரிக்காவின் அகால ஆயுத ஆசை அநியாயமாகப் பள்ளிப் பாலகர்கள், தொட்டு பரிதாப பாட்டா பாட்டிகள் வரை யாவரையும் பாதிக்கிறது. எனவே அடுத்த தலைமுறைகள் விழிப்புணர்வுடன் அமெரிக்கச் சாசனத்தை அனைத்து மக்கள் வாழ்வைப் பேணவும் ஆக்கிக் கொள்ளல் அவசியமாகும்.

தொகுப்பு – ஊர்க்குருவி

உச்சாத்துணைகள்

1 https://www.pbs.org/newshour/show/what-we-have-learned-20-years-after-columbine

2 https://lawcenter.giffords.org/state-right-to-bear-arms-in-minnesota/#footnote_0_6813

3 https://www.revisor.mn.gov/constitution/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad