சொற்சதுக்கம் 9
கீழே கட்டத்துக்குள் இருக்கும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!
தி | வ | த் | ம |
த | ர் | ச | ந் |
ம் | ர | ட | ங் |
ட் | சு | ன | க |
- தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் இரு _____ _____ _____ கூப்பி வாக்கு சேகரிப்பார்கள்
- அரச குடும்பத்தினர் போருக்கும் பிற இடங்களுக்கும் செல்லப் பயன்படுத்திய குதிரைகள் பூட்டிய வாகனம் _____ _____ _____
- வானரங்கள் கனி கொடுத்து _____ _____ _____ எனப்படும் பெண் குரங்குகளைக் கொஞ்சுவதாக குற்றாலக் குறவஞ்சியில் பாடல் உண்டு.
- ஒரு காலத்தில் அவசரத் தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்பட்ட 163 ஆண்டு கால _____ _____ _____ சேவையை இந்திய அஞ்சலகத்துறை 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தோடு நிறுத்திவிட்டது.
- அவலமான விஷயம் என்பதைக் குறிப்பிட “_____ _____ _____ சிரித்துவிட்டது” என்று சொல்வதுண்டு.
- ஒளி என்பதைக் குறிப்பிடும் மூன்றெழுத்துச் சொல். பாரதியார் தனது பாடல் ஒன்றில் “சுட்டும் விழிச் _____ _____ _____” என்று பாடியுள்ளார்.
- சூரியன் தரும் ஒளியை இப்படிச் சொல்வார்கள். கைபேசியிலிருந்து வெளியாகும் _____ _____ _____ வீச்சு உடலுக்குத் தீங்கு விளைவிக்குமாம்.
- _____ _____ _____ என்பது ஒருவகையான நாட்டியம். அழகு, பெருமை என்பதைக் குறிப்பிடவும் இச்சொல் பயன்படுகிறது.
- கடவுள் தனது பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்ற _____ _____ _____ வழங்குவதாக நம்பப்படுகிறது.
- கையால் நூற்ற நூலிழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் துணிவகை. கக்கன், காமராஜ் போன்ற தலைவர்கள் பலர் ஆங்கிலேயரின் பொருளாதாரத்தை வீழ்த்தும் வகை _____ _____ _____ ஆடைகள் மட்டுமே அணிந்து வந்தனர்.
- எல்லையைப் பாதுகாக்க _____ _____ _____ கட்டவேண்டும் என்பதைத் தனது குறிக்கோளாகக் கொண்டு வலியுறுத்திவருகிறார் அமெரிக்க அதிபர்.
- யுத்தம், போர் எனும் பொருள் தரும் மூன்றெழுத்துச் சொல் _____ _____ _____.
- _____ _____ _____ என்பது பொன், செல்வம் என்பதைக் குறிக்கும்.
- காடு, கானகம் என்பதற்கு மறுசொல் _____ _____ _____.
- அக்கால முனிவர், ஆன்மிக நாட்டத்தால் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தத் தன்னந்தனியே காடுகளில் _____ _____ _____ மேற்கொள்வர்.
- ஆபரணங்கள் செய்ய உதவும் இந்த உலோகத்துக்கு காஞ்சனம், சொர்ணம் எனப் பலபெயர்கள் உண்டு. _____ _____ _____ _____.
- இறக்குமதி, ஏற்றுமதிகளுக்கு செலுத்தப்படும் வரி _____ _____ _____ _____. இவ்வரியினை வசூலிக்கத் தனியாக அரசுத்துறையே உள்ளது.
- தமிழை வளர்க்கும் பொருட்டு அரசர்கள், புலவர்கள் உண்டாக்கிய ஒரு கூட்டமைப்பு _____ _____ _____ _____
- இந்தியாவில், கிழக்குப் பகுதி என்று ஒன்று இல்லாதபோதும் மேற்கு _____ _____ _____ _____ என்று ஒரு மாநிலப் பகுதி உள்ளது. இச்சொல்லுக்குப் படகு போன்று கடலில் பயணிக்கக்கூடிய நாவாய் என்ற விளக்கமும் உண்டு.
- பன்னிரெண்டு ராசிகளில் ஒன்றான இதற்கு நண்டு தான் சின்னம் _____ _____ _____ _____
- ஒரு விஷயத்தைச் செயலாக்கும் முன் அதன் வழிமுறைகளைச் சிந்திப்பதை _____ _____ _____ _____ தீட்டுதல் என்பர்.
- _____ _____ _____ _____ என்பது 360 டிகிரிகள் கொண்ட, பக்கங்கள் இல்லாத ஒரு வடிவம். ஆளுமைக்காக பிரிக்கப்படும் நிலப்பகுதி ஒன்றும் இதே பெயரில் வழங்கப்படுகிறது.
- நாற்கோணம் எனும் நான்கு பக்கங்களைக் கொண்ட வடிவம் _____ _____ _____ _____
- உண்மையா பொய்யா என ஆராயப்படாமல் பரபரப்பாகப் பரவும் தகவல் _____ _____ _____ _____
- கவனத்தைக் கவரும் உரையாடலை _____ _____ _____ _____ என்பார்கள். இன்றும் இச்சொல்லுக்கு பராசக்தி திரைப்படத்தைத் தான் உதாரணமாகச் சொல்வார்கள்.
- இறந்தவரின் உடலை எரிக்கும் முறையை _____ _____ _____ _____ என்பார்கள்.
- முகத்தை இப்படியும் சொல்லலாம் _____ _____ _____ _____ எம்.கே. தியாகராஜர் ஒரு திரைப்படத்தில் ‘சந்திர பிம்பமோ’ என்று வியந்து பாடியது மிகப்பிரபலம்.
- ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் இறந்த மாதத்தில். அதே திதியில் நடத்தப்படும் சடங்கு _____ _____ _____ _____ எனப்படுகிறது.
- போருக்குச் செல்லும் போது பாதுகாப்புக்காக உடல் முழுதும் _____ _____ _____ _____ அணிவர். இன்று இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலையைப் பாதுகாக்கவும் இதை அணியச் சொல்கிறார்கள்.
- ஒரு செயல், நடவடிக்கை இயல்பான வேகத்துடன் நடைபெறாமல் மெதுவாக நடைபெறுவதை _____ _____ _____ _____ ஆகி விட்டது என்பார்கள்.
- யானையின் பல் _____ _____ _____ _____. பொதுவாக ஆண் யானைகளுக்கு மட்டுமே இவை காணப்படுகின்றன.
- கவிதைகளில் காணப்படும் இசைநயம் _____ _____ _____ _____
- மனிதர் உடலிலுள்ள நரம்புப் புள்ளிகளை _____ _____ _____ _____ என்பார்கள். இந்த நரம்புப் புள்ளிகளைக் கொண்டு உடல் குறைபாடுகளைச் சீர்படுத்தவும் முடியும், சீரழிக்கவும் முடியும்.
- இரண்டு நபர்களிடையே வியாபாரம், ஒப்பந்தம் போன்ற விவகாரங்களைச் சுலபமாக சிக்கலின்றித் தீர்த்து வைப்பவர் _____ _____ _____ _____
- அனைத்தும், மொத்தம், முழுதும் என்பதைக் குறிக்க உதவும் சொல் _____ _____ _____ _____
- ஆட்டின் தலையையும், மீனின் உடலையும் கொண்ட ஒரு கடல்வாழ் உயிரனமாக உருவகிக்கப்பட்டு 12 ராசிகள் ஒன்றின் அடையாளமாக விளங்கும் விலங்கு _____ _____ _____ _____
- ஒரு பொருளின் நிலை திண்மம், வாயு அல்லது _____ _____ _____ _____ ஆகிய ஒன்றில் அடங்கும்.
- பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் தங்கம் மற்றும் கனிமங்களைத் தோண்டியெடுக்கும் இடம் _____ _____ _____ _____ _____.
- ஒரு காரியத்தைச் சாதிக்கப் பின்பற்றப்படும் சாமர்த்தியமான வழிமுறை _____ _____ _____ _____ _____ எனப்படும்.
- இறைவனிடம், சில அனுகூலங்கள், ஆற்றலைப் பெற மனிதன் உச்சரிக்கும் சில சூத்திரம் மற்றும் உச்சாடனம் போன்றவை _____ _____ _____ _____ _____ என்றழைக்கப்படுகிறது;
- அக்காலங்களில் நடந்து செல்லும் வழிப்போக்கர்கள் தங்கி ஓய்வெடுத்துச் செல்லக் கட்டப்பட்ட தங்குமிடம் _____ _____ _____ _____ _____.
- மரத்திலிருந்து கிடைக்கும் சூட்டைத் தணிக்கும் குணமுடைய, நறுமணம் மிக்க ஒரு பொருள். _____ _____ _____ _____ _____.
- மஞ்சள் நிறத் தனிமப் பொருள்; அமிலமாகவும் காணப்படும் இதனைப் புகை உண்டாக்கவும், துப்பாக்கி வெடிகுண்டுகளிலும் சேர்க்கிறார்கள் _____ _____ _____ _____ _____.
- குளிர்காலத்திற்கும், கோடை காலத்திற்கும் இடையில் வரக்கூடிய இளவேனிற்காலம் _____ _____ _____ _____ _____
- _____ _____ _____ _____ _____ என்பது பச்சை நிற நவரத்தினம்.
- முடிவெடுக்க முடியாமல் மனதில் ஏற்படும் நெருடல் அல்லது இக்கட்டான சூழலை _____ _____ _____ _____ _____ என்பார்கள். ‘தர்ம’ முன்னொட்டைச் சேர்த்தால் கூடுதல் நெருடல் என்று பொருள்.
- _____ _____ _____ _____ _____ என்னும் சொல்லுக்கு ஒன்று சேர்தல் அல்லது கூடுமிடம் என்று பொருள். பொதுவாக நதிகள் கடலோடு சேருமிடத்தைக் குறிப்பிட இச்சொல்லை பயன்படுத்துவார்கள்.
- சுகமான பரவச நிலையைத் தரும் நறுமணத்தை _____ _____ _____ _____ _____ என்பார்கள்.
- விடுதலை என்பதன் மாற்றுச்சொல் _____ _____ _____ _____ _____ _____
- தாவரங்களில், குறிப்பாக மலர்களில் இருக்கும் மலர்த்தாது அல்லது ஆண் பாலணுக்கள் _____ _____ _____ _____ _____ _____ எனப்படும். பட்டாம் பூச்சி, தேனீ, பறவைகள் மூலம் இவை பெண் பாலணுக்களுடன் சேர்க்கப்படுகின்றன.