பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2019
பல்வேறு ஆசியக் கலைக்குழுக்கள், கலைஞர்கள் கலந்துகொண்ட பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல், ப்ளுமிங்டனில் இருக்கும் மால் ஆஃப் அமெரிக்கா பேரங்காடியில் மே 4ஆம் தேதியன்று நடைபெற்றது. காலை பதினொரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய, சீன, ஜப்பானிய இசைக்குழுக்களும், நடனக்குழுக்களும் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரத நாட்டியம், காவடி, கரகம் போன்றவற்றுடன், தமிழ் திரைப்பாடல்களுக்கும் தமிழ்க்குழுக்கள் நடனமாடின. நிகழ்ச்சிக்காக வந்திருந்த பார்வையாளர்களுடன், பேரங்காடிக்கு வந்தவர்களும் பார்வையாளர்களாக மாறி நிகழ்ச்சியைக் கண்டுக்களித்தனர். மால் ஆஃப் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏசியன் மீடியா ஆக்சஸ் நிறுவனம் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு.
- சரவணகுமரன்