\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கோழி சுக்கா

சுலபமான முறையில் சுவையான கோழி சுக்காவுக்கான  செயல்முறை இது.

தேவையான பொருட்கள்:

கோழி – 400g

–ஊறவைக்க தேவையான பொருட்கள்:–

மஞ்சள் தூள் – 1 tsp

காஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 tsp

கொத்தமல்லித் தூள் – 2 tsp

கரம் மசாலாத் தூள் – 1 tsp

சீரகத் தூள் – 1 tsp

மிளகுத் தூள் – 1 tsp

இஞ்சி பூண்டு விழுது – 2 tbsp

தயிர் – 2 tbsp

உப்பு – தேவைக்கேற்ப

இதர பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 3 tbsp

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:-

  1. முதலில் கோழியை நன்றாக மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அதன் பிறகு ஓரு பாத்திரத்தில் இவற்றை  மாற்றி – பின்னர் அதில் ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து ஓரு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை ஊற விடவும்.
  3. ஓரு வாணலியில் தேங்காய் எண்ணையை ஊற்றி, அதில் கறிவேப்பில்லை தாளித்து – கோழியைச் சேர்க்கவும்.
  4. மிதமான சூட்டில் நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வறுக்கவும்.
  5. சுவையான கோழி சுக்கா தயார்.

பொன்னி

சமையல்கலையில் பெரும் ஆர்வம் கொண்ட இவரின் பிற உணவுப்படைப்புகளைத் தொடர்ந்திட,

https://www.instagram.com/ponni_recipes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad