\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பட்டமளிப்பு விழா 2019

மினசோட்டாவிலுள்ள மேப்பிள் குரோவ் இந்து கோவிலில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும்  மாணவர்களுக்கு மே மாதம் 19 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, ஓக்கலாமா மாநிலப்  பல்கலைக் கழகத்தின், பத்மஸ்ரீ முனைவர் சுபாஷ் காக்,  சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். முனைவர் டேஷ் அறக்கட்டளை சார்பில் சிறந்த 7 மாணவர்களுக்கு $500 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது

இவர்கள் அனைவரும் கோவில் மற்றும் கோவில் பள்ளிகளில் பணியாற்றிய தன்னார்வலத் தொண்டர்கள். இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள்  தங்களது எதிர்காலக் கல்வித் திட்டத்தைத் தெரிவித்தனர். கோவில் நடத்தும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கு கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வேண்டி கோவில் நிர்வாகம் சார்பாகச் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

-ராஜேஷ் கோவிந்தராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad