அகர வரிசையில் அழகிய மினசோட்டா
அகரவரிசையில்அழகிய மினசோட்டா
ஈ – ஈலீ Ely MN, மினசோட்டாவின் வடமேற்கில் மாகாணத்தின் பெரிய செயின்லூவிஸ் மாவட்டத்தில்அமைந்துள்ளது – இவ்விடம் BWCA எனப்படும் கைத்தோணி (Canoe) ஏரிக்கரைக்கு அருகாமையிலும் 3 மில்லியன் ஏக்கர் சுப்பீரியர் காட்டையும் எல்லையாகக் கொண்டது. இவ்விடம் பிரதான உல்லாசப்பயணிகள் பார்வைக்கு தேசத்தின் பிரதான ஓநாய்ப் பாதுகாப்பு, பராமரிப்பு ஆராய்ச்சிக் கூடம் மேலும் காட்டில் மான், மரை, மற்றும் கறுப்புக் கரடி, கழுகு, மற்றும் நீர்ப்பறவைகளையும் காணக்கூடியவைகளாக உள்ளன.
இயற்கையாக ஒன்றுடன் ஒன்று என இணைந்த பல ஏரித்தொடர்கள் காணப்படுவதே இவ்விடத்தின் சிறப்பாகும். இவையனைத்தையும் உல்லாசப் பயணிகள் நேரடியாச் சென்று பார்வையிடவும், படகு வீடுகளில் தரித்து இருந்து பார்க்கவும் வசதிகள் உள்ளன.
உ – (நியூ) உல்ம் New Ulm MN இது பிரவுண் மாவட்டத்தைச் சேர்ந்த பழைய நகரம். தென் ஜெர்மானிய குடிபெயர்ப்பாளர்களினால் 1854 இல் தாபிக்கப்பட்ட நகரம். இந்த நகரம் ஜெர்மனியன் உல்ம் நகருடன் இன்றும் சகோதரி நகரமாக சொந்தம் கொண்டாடுகிறது. இது மினியாபொலிஸ் நகரிற்கு அருகாமையில் தென் மேற்கில் அமைந்துள்ள ஊர்.
மினசோட்டா மாகாணத்தில் சிறப்பான ஜெர்மானிய கொண்டாட்டங்கள் சிலவற்றை வருடா வருடம் இங்கு நடத்துவது வழக்கம். ஜூலை மாதத்தில் பாவேரியன் பிளாஸ்ட் எனவும், மீளவும் அக்டோபர் திங்களில் பிரபல ஜெர்மானிய அக்டோபர் ஃபெஸ்ட் எனப்படும் பியர் பான விழாவும் நடைபெறும்.
ஊ – ஊப்சலா Upsala MN சுவீடன் குடிபெயர்ப்பாளர்களினால் தாபிக்கப்பட்ட நகரம் இது. மொரிஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் உல்லாசப் பயணிகளுக்கு பிரதானமாக மீன்பிடித்தலுக்கான வசதிகளையும், தெளிவான ஏரிக் கரை மணல் நிலங்களையும் தருகின்றது. இங்கு சீடர் ஏரிப் பூங்காவும் மேலும் மூன்கு கால்ஃப் மைதானங்களும் இருக்கின்றன. இதைவிட நடப்பதற்கும், ஓடுவதற்கும், மேலும் மிதி வண்டி ஒட்டுவதற்கும் பாதைகள் பல உள்ளன.
– யோகி அருமைநாயகம்.