\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

2019 இளையோர் கலை, பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை

ஒவ்வொரு ஆண்டும் மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி நடத்தும் இளையோருக்கான பேச்சுத்தமிழ், கலை மற்றும் பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை இந்தாண்டு ஜுன் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில்  ஆப்பிள் வேலியில் உள்ள Camp Sacajawea என்னும் இடத்தில் நடந்தது.

இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் நடைபெற்ற பட்டறையில் கலந்துகொண்ட இளையோருக்குப் பேச்சுத்தமிழிலும்,  தவில், நாதஸ்வரம், நாட்டுப்புறப் பாடல், நடனம் போன்ற கலைகளிலும், கபடி, சிலம்பம், பம்பரம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இரு தினங்களிலும் காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டியாக கூழ், புட்டு, வடை, சாம்பார், ரசம், மோர், சுண்டல் போன்ற பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. கோடைக்கால வாரயிறுதி ஒன்றில் நடைபெற்ற இந்தப் பட்டறை, கலந்துகொண்ட இளையோருக்கு தமிழர் பண்பாடு சார்ந்த புத்துணர்வை அளிக்கக்கூடியதாக அமைந்தது.

 

 

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad