\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சம்பூரண ராமாயணம் – சின்மயா மிஷன்

மினசோட்டாவின் சாஸ்க்கா நகரில், சின்மயா கணபதி என்றழைக்கப்படும் சின்மயா மிஷன் அமைந்துள்ளது. கோடை விடுமுறையாதலால் பால் விஹார் பள்ளிகளுக்கும் விடுமுறை. அப்படியிருக்க ஆன்மிகப் பசி எடுப்பவர்களுக்கு வயிறார உணவளிக்கும் வகையில் இவர்கள் சம்பூரண ராமாயணம் காலாட்சேபம் நடத்தினர். சுவாமி சாந்தாநந்தா அவர்கள் நமது ட்வின் சிடிஸ்க்கு விஜயம் செய்து இந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திவைத்தார். சூலை 14  முதல் 20 வரை இந்த நிகழ்வு நடந்தது. 

துளசிதாஸ் எழுதிய ராமா சரித்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உரையாற்றிய அவர், முதல் நாள் ஸ்ரீ ராமர் பிறப்பின் சிறப்பினை விவரித்தார். இரண்டாம் நாள் ஸ்ரீ ராமர் சீதாதேவி விவாகம், பிறகு பாரத காண்டம் எனப் படிப்படியாக நடந்தவற்றை விவரித்து, அதன் மகத்துவம் பற்றியும் விவரித்தார். ஏழாம் நாள் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் பற்றி சொல்லி முடித்தார். 

இந்த ஏழு நாட்களும் எப்படிச் சென்றனவென்றே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் சிறுவர்களும் ஸ்ரீ ராமா சரித்திரத்தை, சிறிய இசை நாடகம் வழியாக நடித்துக் காட்டினர். மூன்று வயது குழந்தை முதல் பதினாறு வயது வரை சிறார்கள் பாடி, நடித்து நம்மை வேறுலகிற்குக் கொண்டுச்சென்றனர்.

இந்த நிகழ்வையம் அதன் அனுபவத்தையும் அப்படியே உங்கள் முன் கொண்டுவர இயலாது. எனினும், ஒரு சில புகைப்படங்கள் மூலம் எங்கள் அனுபவத்தைப் பகிர்கிறோம்.  

-பிரபு 

படத்தொகுப்பு: பிரசாந்த் நேனே (Prashant Nene)

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad