மனித உடலின் மிகக் கடினமான வலி
மருத்துவத் துறையில் பல்வேறு வளர்ச்சி அடைந்த கால கட்டம் முதல் இன்னமும் தீர்வே கண்டு பிடிக்காத கடினமான நோய்கள் உலகில் இருந்து கொண்டே இருக்கின்றன. Trigeminal neuralgia அது போன்ற ஒரு நோயே. இது “மனித உடலின் மிகக் கடினமான வலி” என்று அழைக்கப்படுகிற ஒரு முக நரம்பு நோய்.
சிரிப்பதாலும்,பேசுவதாலும்,பல் துலக்குவதாலும்,தொடுவதாலும், உண்பதாலும் கூட ஒரு மனிதனுக்கு கொடிய வலி உண்டாகும் என்பது வேதனைக்குரியது. இந்த நோய் பற்றி ஒரு விழிப்புணர்வு உண்டாக்க ஐந்து கிலோமீட்டர் நடை பயணம் ஆகஸ்ட் 18 ம் தேதி காலை 9 மணிக்கு தன்னார்வல தொண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நடைபெறும் இடம் :
Normandale Lake park, W 84th St & Chalet Rd, Bloomington, MN 55437
நிகழ்விற்கு நிறைய நல்லுள்ளங்களின் பங்களிப்பை எதிர் பார்க்கிறோம்.
-லட்சுமி சுப்பு