\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கலாம்

Filed in இலக்கியம், கவிதை by on May 31, 2013 0 Comments

drkalam2_kavathai_620x620

அறிஞரை மதிக்கலாம்; அன்னையைத் துதிக்கலாம்!
அறிவியல் பெருக்கலாம்; அழகுகள் சமைக்கலாம்!
அறநெறி உரைக்கலாம்; அல்லவை தவிர்க்கலாம்!
அறிவாட்சி சிறக்கலாம்; அசதியைத் துறக்கலாம்!

அறிவை வளர்க்கலாம்; அழிவைத் தடுக்கலாம்!
அன்பைப் போதிக்கலாம்; அநீதியை எதிர்க்கலாம்!
அணுவைப் படிக்கலாம்; அகிம்சை பழக்கலாம்!
அக்னியை ஏற்கலாம்; அவனியை அணைக்கலாம்!

கற்பதை நினைக்கலாம்; கசப்பதைத் தொலைக்கலாம்!
கருணையில் திளைக்கலாம்; கர்வத்தை மறக்கலாம்
களைப்பினைத் துடைக்கலாம்; களிப்புடன் சிரிக்கலாம்!
கண்ணியம் வரிக்கலாம்; கடுந்தவம் தரிக்கலாம்!

கழனியில் உழைக்கலாம் ; கணினியில் கதைக்கலாம்!
கன்னித்தமிழ் கற்கலாம் ; கவிதைகள் படைக்கலாம்!
கனவுகள் காண்கலாம்; கடமைகள் செய்கலாம்!
களம்பலகண்ட கலாம் கரம்பற்றி நடக்கலாம்!

– ரவிக்குமார் & மதுசூதனன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad