\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஆகஸ்ட் 2019)

கடந்த இரண்டு மூன்று மாதங்களில் நிறையத் தமிழ்ப்படங்கள் வெளியாகி இருந்தாலும், வெற்றி சதவிகிதம் மிக மிகக் குறைவு. அதனால், பெரிய ஹிட் பாடல்கள் என்று நிறைய வரவில்லை. இந்த லிஸ்ட்டை எடுத்துக்கொண்டாலே, இதில் நிறையப் படங்கள் ஓடவில்லை என்று தெரியும். இனி வரும் மாதங்களில் நல்ல பெரிய ஹிட் பாடல்களும், படங்களும் வரும் என்று நம்புவோம்.

 

அயோக்யா – கண்ணே கண்ணே

தெலுங்கு டெம்பரின் (Temper) தமிழ் ரீ-மேக்கான இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலைப் பாடியது அனிருத். படத்திற்கு இசை – சி.எஸ்.சாம். பிற இசையமைப்பாளர்களின் படங்களில் தொடர்ந்து பாடி வருகிறார் அனிருத். இதுவரை சுமார் 70 பாடல்களைப் பாடிவிட்டார். தெலுங்கு அளவுக்கு இப்படம் தமிழில் ஓடவில்லை. படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் பார்த்திபன். இப்படத்தின் கதை பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திபன் இயக்கி நடித்த ‘உள்ளே வெளியே’ போன்றது தான். அதை வைத்து லைட்டாகச் சர்ச்சை கிளப்பி, விளம்பரம் செய்தாலும், படத்தின் வெற்றிக்கு அது உதவவில்லை.

 

தேவி 2 – சொக்குற பெண்ணே

பிரபுதேவாவுக்கு எந்தப் படமும் ஓடவில்லையென்றாலும், அவர் படங்களுக்கு ஹிந்தி சாட்டிலைட் ரைட்ஸ் வியாபாரம் இருப்பதால், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வருகிறதில் ஏதாவது ஓடினால், நன்றாக இருக்கும். இதே போல, இயக்குனர் விஜய்க்கும் சொல்லலாம். படம் ஓடுதோ, இல்லையோ, படம் இயக்கி தள்ளுவதே என் கடன் என்று இருக்கிறார். தேவி 1 அளவுக்குத் தேவி 2 ஓடவில்லை என்பது இன்னொரு சோகம். பிரபுதேவாவின் ஆட்டத்தைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

 

என்.ஜி.கே. – அன்பே பேரன்பே

ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடும் இயக்குனர் செல்வராகவன் நீண்ட காலத்திற்குப் பிறகு இயக்கி வெளிவரும் படமென்பதாலும், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படமென்பதாலும், இப்படத்திற்குத் திரை ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. துரதிஷ்டவசமாகப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யவில்லை. கோனார் கைடு போல், செல்வராகவன் கைடு கொடுக்க வேண்டிய நிலை. செல்வராகவன் ரொம்பவே மாறிவிட்டார். உதாரணத்திற்கு, இந்தப் பாடலைப் பாருங்கள். செல்வராகவன் படத்து பாடல் என்று செல்வராகவன் சொன்னாலே நம்ப மாட்டோம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் இந்தப் பாடலைப் பாடியவர் தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் சிங்கர் சித் ஸ்ரீராம்.

 

மான்ஸ்டர் – அந்தி மாலை

இசையமைப்பாளர்கள் தங்கள் படத்தில் ஒரு பாடலாவது ஹிட் ஆக வேண்டுமென்றால், சித் ஸ்ரீராமை புக் செய்து விடுகிறார்கள். யார் இசையமைத்த பாடல் என்றாலும், சித் ஸ்ரீராம் பாடினால் ஒரு மாதிரி ஆகிவிடுகிறது. ஒரே மாதிரி ஆகிவிடுகிறது. அதுதான் அவருடைய பலமும் பலவீனமும். படத்தின் கதை ஒரு எலியைச் சுற்றி வரும். குழந்தைகளைக் கவரும்படியாக எடுக்கப்பட்ட இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்றது. இளைஞர்களைக் கவரும்படியாக ப்ரியா பவானிஷங்கர் வேறு இருந்தார் என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம்!!

 

கடாரம் கொண்டான் – தாரமே தாரமே

இதோ, இன்னுமொரு சித் ஸ்ரீராம் பாடல். கமல் தயாரிக்க, அவருடைய சிஷ்யர் ராஜேஷ் இயக்க, விக்ரம் கதாநாயகனாக நடித்து வெளிவந்த இப்படத்திற்கு இசையமைத்தது கிப்ரான். முழுவதும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்ட இப்படத்தைக் கடைசியில் மலேசியாவில் தடை செய்துவிட்டார்கள். விக்ரம் ஹீரோ என்றாலும், படத்தின் கதை சுற்றி வருவது கமல் மகள் அக்ஷரா ஹாசனையும், நாசர் மகன் அபி ஹாசனையும் ஆகும். ஒரு ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் அப்படத்திற்கு இணையாக நல்ல தரத்துடன் எடுக்கப்பட்டு இருந்தது. படம் வெற்றி என்பது கடுமையாக உழைத்த படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

 

 

இவை தவிர, கொலைகாரன், A1, Mr. லோக்கல், தும்பா, ஆடை போன்ற படங்களும் இந்தக் காலக்கட்டத்தில் வெளிவந்து சிறு கவனத்தைப் பெற்றிருந்தன. குறிப்பாக, கொலைகாரன் பின்னணி இசை அபாரம். ஹெட் ஃபோன் போட்டுக் கேட்டுப்பாருங்கள்.

 

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad