\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாதத்தின் மாமனிதர் – மேதகு ஜவகர்லால் நேரு

மே மாதத்தின் மாமனிதராக யாரை நினைவு படுத்தலாம் என்று ஆராய்ந்த பொழுது தமிழினத்தையும் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பாக எழுதி இருக்கும் அவரை நினைவு கூர்தல் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது.

nehru_420x533இந்தியக் குடியரசின் முதல் பிரதம மந்திரி, அவர் சார்ந்த கட்சிக்கு கொள்கை இல்லை என்றாலும் நேர்மையான பொதுவுடைமைக் கொள்கையையும் நியாயமான கூட்டாட்சி கோட்பாட்டையும் முன்மொழிந்தார், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அதைக் குழிதோண்டிப் புதைத்தது வேறு விடயம்.

542 பிரதானச் சிற்றரசுகளையும் பகுதிகளையும் உள்ளடக்கி தங்களின் மொழி, பண்பாடு மற்றும் தனித்துவத்தை மதித்துக் கூட்டாட்சியாக நடைபெறும் மக்களாட்சியாக இந்தியா மலரவே மேதகு நேரு அவர்கள் விரும்பி அதற்கேற்ற வகையில் ஆட்சியும் செய்தார்.

இந்தத் தெளிவு இவருக்கு வந்ததன் காரணம் வரலாற்றை ஆழ்ந்து படித்தது, அரசியலுக்கும் சமூகத் தொண்டுக்கும் அவசியம் வரலாற்றைப் பாரபட்சமின்றிக் கற்றிருத்தல் வேண்டும், அதைத் திறம்படப் பயின்றவர் மேதகு நேரு அவர்கள்.

நவம்பர் 14 ஆம் திகதி 1889ஆம் ஆண்டு பிறந்த இவர், மே மாதம் 27 1964ஆம் ஆண்டு மறைந்தார். அவரின் நினைவு நாள் இந்த மே மாதத்தில் வரும் வேளையில் அம்மாமனிதரைப்பற்றி நினைவு கூர்வோம்.

மோதிலால் நேரு எனும் காசுமீர பண்டிதர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த நேரு அவர்கள், பொதுப்பள்ளிகளில் அவர் கல்வி பயிலவில்லை, தன் வீட்டிலேயே தன் தந்தையார் அமைத்துக் கொடுத்த ஆசிரியரிடம் பயின்றார்.

தன் இளம்பருவத்து வாழ்க்கை சராசரியாக இருந்ததாகவே நேரு நினைவு கூர்கிறார், செல்வக் குடும்பத்தில் பிறந்ததுடன் நேருவின் தந்தையார் காங்கிரசு கட்சியிலும் பெருந்தலைவராகவும் இருந்தார், காங்கிரசு கட்சியின் இந்தியத் தலைவராக இருமுறை
பதவி வகித்தார். இந்தச் சூழலில் திளைத்த நேரு, இளம்பருவத்தில் எந்த வாழ்க்கைச் சோதனைகளும் இல்லாததால், தத்துவார்த்தமாக இலக்கியங்களைப் படித்தார்.

பின் நாளில் தன் மகள் இந்திராவிற்கு வரலாற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கத் தொடராக எழுதிய கடிதங்கள் பற்றிய நூல் ‘Discovery of India”. மொகஞ்சதாரோ/ஹரப்பா நாகரிகங்களின் தோற்றத்தையும் தொன்மையையும் பற்றி எழுதும்

பொழுது ஆசியத் துணைக்கண்டத்தின் முதல் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் என்பதைக் குறிக்கிறார். அத்துடன் சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துரைக்கும் மொகஞ்சதாரோ/ஹரப்பா நகரங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியில் கடைசியாக அறிந்த நிலைக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்று சொல்கிறார். சிந்து சமவெளி நாகரிகம் திராவிட இனத்தின் வாழ்க்கைக் கூறுகள் பண்பாட்டுடன் மிக ஒத்து இருப்பதுடன், சாதிகளற்ற மதச்சார்பற்ற சமத்துவமான சமூகமாக இருந்ததாக நேரு குறிக்கிறார்.

திராவிட மொழிக்குடும்பத்துடன் ஒத்த கல்வெட்டுகள் சிந்து சமவெளி நாகரிகம் முழுமையும் கண்டெடுத்ததையும் குறிப்பிடுகிறார். சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவிற்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சிறியக்குழுக்களாக இந்திய
துணைக்கண்டத்தில் குடியேறியவர்கள் ஆரியர்கள் என்பதையும் தெளிவாக எழுதியிருக்கிறார்.

இந்து மதம் என்ற சொல் முதன் முதலில் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் முதன் முதலாகப் பயன்படுத்தப் பட்டது என்றும் எழுதியிருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்தும் பிந்திய காலத்தில் தான் சாதிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் புகுத்தப்பட்டதையும், அவற்றை நிலை நாட்ட இந்து மதம் என்ற சொல் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு பயன்படுத்தப்பட்டதையும் நேரு தெளிவாக்குகிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின் வந்த புத்தர், அப்பொழுதிருந்த வேதங்களைச் சார்ந்த சாதிய ஏற்றத்தாழ்வை எதிர்க்கவே புத்த மதத்தைத் தொடங்கினார் என்பது நேருவின் கருத்து.

நேரு தான் வாழ்ந்த சூழ்நிலைக்கும் சமூகத்திற்கும் மாறாக வரலாற்றைக் கற்றுத் தேர்ந்ததன் விளைவாக நாத்திகராக வாழ்ந்தார் என்பது இந்திய மக்கள் பலருக்கும் தெரியாத செய்தி. நடுநிலையுடன் அனைத்து மத நூல்களையும் பயின்ற பின்பே
அவருக்கு நாத்திகத் தெளிவு பிறந்ததாகவும் கூறுகிறார்.

இந்திய நாடு பல்வேறு இனக்குழுக்களையும், மொழிகளையும் கொண்டதை நன்குணர்ந்த நேரு அவர்கள் சில குறைந்த பட்ச காரணிகளுடன் தான் இந்திய நாடு செழிப்படைந்து வளர்ச்சியும் அடையும் என்பதை உணர்ந்து மொழிக்கொள்கை மற்றும் மொழி சார்ந்த மாநிலங்களாகப் பிரித்து இந்திய நாட்டு அரசியலமைப்புச் சட்டம் போன்றவற்றை வடிவமைக்க வழி வகுத்தார்.

பின்பு வந்தவர்கள், சிறிது பெரும்பான்மையாக இருந்ததைத் தவறாகப் பயன்படுத்தி இந்தி மொழி ஆதிக்கத்தைச் செலுத்தியதால் பல நூறு தொன்மையான மொழிகளை இந்தியத் தேசம் இழந்திருக்கிறது, இழந்து கொண்டும் இருக்கிறது. தமிழ் போன்ற சில

மொழிகள் இதற்கு விதிவிலக்காக உள்ளன, எவ்வளவு ஆண்டுகள் என்று தான் தெரியவில்லை. ஐரோப்பா போன்று பொருளாதாரம் போன்ற துறைகளில் மட்டும் ஒரு கூட்டாட்சியாக மலர நினைத்த நாட்டை, பெரும்பான்மைக் கொள்கைகளைப் பயன்படுத்தி நாட்டின் தொன்மையான பண்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் நிலை தான் தொடர்கிறது., இது நேருவின் கனவிற்கு எதிர்முரணாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

உண்மையான கூட்டாட்சிக்கு முழு மனதுடன் முயற்சித்த மேதகு நேரு அவர்களின் நினைவு நாளில் அந்த மாமனிதரை நினைவு கூர்வோம்.

Nehru’s own words on page #102 of his “Discovery of India”: “it is true that Indians are peculiarly liable to accept tradition and report as history, uncritically and without sufficient examination. They will have to rid themselves of this loose thinking and easy way of arriving at conclusions”

இந்தியர்கள் பாரம்பரியத்தையும் குடும்ப மரபையும் முழுதும் ஆராயாமல் வரலாறாகச் சித்தரிப்பதும் அதை மற்றவர்களின் மேல் புகுத்தும் தனித்துவமும் கொண்டவர்கள். அவர்கள் இந்தத் தளர்வான/எளிதான முறையில் முடிவுக்கு வரும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் உரைக்கிறார் பண்டித நேரு, அதை நாமும் கடைபிடிப்போம்.

– மா.சிவானந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad