\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கரம் நிறைய கனிந்த புளுபெரிகள்

அதி விசையுடன் நகரும் எமது வாழ்வு, எமது உடலோடு ஒட்டிய தொலைத் தொடர்புச் சாதனங்கள் – இயற்கையின் எழிலான இன்ப வாழ்வில் இருந்து எம்மைத் தள்ளி வைக்க முனைகிறது எனலாம்.

மினசோட்டா மாநிலத்தில் சென்ற, இரு தசாப்தங்களில் குடிமனை கட்டடங்களும், வர்த்தகத் தலங்களும் காடுகளை அழித்து,  சனப் பெருக்கம் உள்ள நாடாக்கியவாறு உள்ளன எனலாம்.

நம்மில் பலர் இது செளகரியந்தானே என்று நினைக்கலாம் ஆயினும் இது சென்ற 200 ஆண்டு அமெரிக்க கிராமிய வாழ்வுக்கு மாறானது. நவீனம் எனும் பாணி கை தூக்கினும் இன்றும் மினசோட்டாவில் பல நாட்டுப்புற நல் விடயங்களும், ஆற்று ஏரிப் பள்ளத்தாக்கில் வளரும் காடுகள் மத்தியில் விவசாயமும் காணப்பட்டு வருகிறது.

இம் மாநிலத்தில் எனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று கோடைக்கால மத்தியில், கனிந்த பெரிப் பழங்கள் அறுவடைக்குச் செல்வதுதான். அதிலும் அவுரிநெல்லி எனப்படும் புளுபெரிப் பழங்களை மரங்களிலிருந்து  பறித்து, சேகரித்து கொணர்வது என்னைப் பொறுத்தளவில் இயற்கையுடன் ஒன்று கூடும் சிறப்பு நேரமாகும்.

மினசோட்டாவில் உச்சந்தலை வெய்யிலுக்கு நடுவே, பரந்த குளுகுளுவென்ற  பச்சைப் பசேல் தோட்டங்களில், அடுத்திருக்கும் சிறு அருவிகள், சுனைகளில் கால் கழுவி, குளிர் நீரில் முகங்கழுவி மீண்டும் பழங்கள் பறித்தல் தனிவகையான இன்பம்.

பெரிப் பழங்கள் பறிக்க பெரும் உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. பழங்கள் சேகரிக்க பை, செடிகளுக்கிடையே சமத்தளமில்லாத தரைகளில்   நடக்கக் கூடிய பாதணி அவ்வளவுதான். பழுத்த பெரிப் பழங்களைக் கையால் இலகுவாகப் பறித்துக் கொள்ளலாம்.

மினசோட்டாவில் இரு வகையான புளு பெரிகள்  இயற்கையாகக் காணப்படும். Low bush berries, Velvet berries என்றழைக்கப்படும். இவை வழமையாக மாநிலத்தின் வடகிழக்குப் பாகத்தில் காணப்படும். ஆயினும் தற்போது வடமேற்கு, தென்கிழக்குப் பாகங்களின் அறுவடை செயப்படுகின்றன.

பைன்மரக்காடுகளிலிருந்து வட மாநில ஏரி, ஒடைக் கரைகளில் படகிலிருந்து அறுவடை செய்யக்கூடிய சூழலிலும், மழை நீர் வடிந்தோடும் கூழாங்கல், மணல் நிறைந்த தென் மாநிலத் தரையிலும் புளு பெரிகள் நன்கு வளரும்.

புளுபெரிகள் பெரும்பாலும் இளவெனில் கால தேனீக்கள், வண்டுகள் மகரந்தச் சேர்க்கை உதவியுடன் காய்க்கும் பெரிப் பழமாகும். மாநில வலயத்தைப் பொறுத்து யூலை மாதத்திலிருந்து ஆகஸ்ட் முதல் இரண்டு வாரங்கள் வரை கொத்துக் கொத்தாக விளையும் புளுபெரி.

  • யோகி

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad