‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019
வட அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் கோடை காலம் என்பது ஜீன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மட்டுமே. இந்த மூன்று மாதங்களில் மக்கள் கோடை காலத்தைப் பல வழிகளில் கொண்டாடி அனுபவிப்பார்கள். மினசோட்டா மாநிலத்தின் உட்பரி நகரில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டாஞ்சோறு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆகஸ்ட் 31ம் தேதி அன்று .உட்பரி நகரப் பூங்காவின் தங்குமனையில் (shelter) இந்தக் கூட்டாஞ்சோறு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதலில் குடும்பப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அனைவரும் வரவேற்கப்பட்டனர். சிற்றுண்டியுடன் துவங்கி இறைச்சி, காய்கறி உணவுகள் பறிமாறப்பட்டன. இனிப்புகளோடு முடிந்த விருந்தினை அனைவரும் ருசித்து மகிழ்ந்தனர்.
குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், மற்றவர்களுக்கான Bingo விளையாட்டுகள் நடைபெற்றன. மாலை நேரத்து தேநீருடன் விழா இனிதே நிறைவு பெற்றது. அனைத்து குடும்பத்தினரும் மனநிறைவுடனும், புதிய சொந்தங்களின் நினைவுகளுடனும் விடைபெற்றுச் சென்றனர்.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக..
ராஜேஷ் கோவிந்தராஜன்