\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா, வன்முறை இல்லாத தினமாக அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினசோட்டா வரலாற்று அமைப்புக் (Minnesota History society) கட்டிடத்தில் சென்ற மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சி, மதியம் மூன்று மணிக்கு, கட்டிடத்தில் உள்ள 3 எம் (3M) அரங்கத்தில் ஆரம்பித்தது. ராம் கடா (Ram Gada) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, மினசோட்டாவில் புகழ் பெற்ற நிர்மலா ராஜசேகர் (Nirmala Rajasekar), Dr.பூஜா கோஸ்வாமி (Dr. Pooja Goswami), வி. ஸ்ரீனிவாசன் (V. Srinivasan), Dr.அல்லகட்ட பவன் (Dr. Allalaghatta Pavan) ஆகியோர் காந்தியைப் பற்றிய பாடல்களைப் பாடி, விழாவை ஆரம்பித்தனர். டீன் மெக்ராவ் (Dean MaGraw) புதிய இசைத் தொகுப்பை  காந்தியின் நினைவாக அர்ப்பணித்தார்.

மினசோட்டா வரலாற்று அமைப்புத் தலைவர் கென்ட் விட்வொர்த் (Kent Whitworth), இந்திய மின்னசோட்டா அமைப்புத் தலைவி நஸிரீன் ஷேக் (Nasreen Shaikh), Dr.அநந்தனன்த் ரம்பச்சான் (Dr. Anantanand Rambachan), அஜய் ஸ்கேரியா (Dr. Ajay Scaria), Dr.டேஷ் (Dr. Dash) மற்றும் சில உள்ளுர் பேராசியர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த விழாவில் காந்தியின் 150ம் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு Dr.டேஷ் பரிசுத் தொகையை அளித்துப் பாரட்டினார். இந்த விழாவில் சிறப்புப் புத்தகம் வெளியிடப்பட்டது. மினசோட்டா மாநில அமைப்புச் (Proclamation) சாற்றுதல் வழங்கியது.

இறுதியாக நிருத்ய கலாக்ஷேத்ரா அகாடெமி (Nritya Kalakshetra Academy) பள்ளியில் பயிலும் மாணவிகள் சைத்ரா சந்திரசேகர் (Chaithra Chandrashekar), ஸ்ரீஜா மரடானா (Sreeja Maradana), நிவேதிதா சபரிநாதன் (Nivedita Sabarinathan), விபா ஸ்ரீவத்சன் (vibha Srivatsan), தன்வி சுரேஷ் (Tanvi Suresh) ஆகியோர் பரத நாட்டியம் நிகழ்த்த, விழா இனிதே முடிவுற்றது.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக:

புகைப்படங்களும், தொகுப்பும்: இராஜேஷ் கோவிந்தராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad