சாய்பாபா கோவில் திறப்பு விழா 2019
வட அமெரிக்க மினசோட்டா மாநிலத்தின் சாஸ்கா நகரில் புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவில் திறப்பு விழா கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் தொடங்கி 15 ஆம் நாள் வரை நடைபெற்று, பக்தர்களுக்குத் திறக்கப்பட்டது
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் குருஜி ஸ்ரீ சி பி சட்பதி (Guruji Shri C.B. Satpathy) முன்னிலையில் சாய்பாபா திருவுருவம் திறக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
இந்தக் கோவிலை நிர்மாணிக்க, சாஸ்கா நகரில் 2014ஆம் ஆண்டு 42 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. தற்போது சுமார் 10,000 சதுர அடியில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவன்று கோவிலின் இரண்டாவது மாடியில் 5000 சதுர அடியில் அமைந்துள்ள பாபா பஜனை மண்டத்தில், குருஜி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஐந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த மூன்று நாட்களில் 2500 க்கும் அதிகமானோர் கோவிலுக்கு வந்திருந்து வழிபட்டுள்ளனர்.
விழா நாட்களில் சனி, ஞாயிறு மாலை நேரங்களில் பலவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உள்ளுர் மாணவ மாணவிகள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றார்கள். இந்த மூன்று தினங்களும் பக்தர்களின் வசதிக்காக பிரதானமான பொது இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள், தங்களது சிற்றுந்துகளை இவ்விடங்களில் நிறுத்திவிட்டு பேருந்துகளில் கோவிலைச் சென்றடைந்தனர்.
பல தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் கோவில் நிர்வாகம் சிறப்பான முறையில் விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் அனைவருக்கும், பனிப்பூக்கள் சார்பில் எங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.
கோவில் புதிய முகவரி 5665, County Rd 10E, Chaska MN 55318 – https://www.saibabamn.org
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!!
-ராஜேஷ்
Tags: Chaska temple, Sai Baba, Shirdi Sai