\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பனிகாலப் பரவசம் 2020

 

January/தை மாதம்

எது எங்கு  எப்போது நிகழ்வு
பனிச்சறுக்கப் பார்ட்டி

 

Lutsen, Minnesota Jan 10 – 11 மினசோட்டா வடக்கிழக்குப் பகுதியில் Lutsen மலைச்சாரல்கள் கோலாகலமாக பனிச்சறுக்குதல் கொண்டாட்டங்களை வருடாந்தம் கொண்டாடும். இவ்விடம் பனிக்குடிசைகள் Charlet  அனுபவமும் போகுபவர்க்குக் கிடைக்கும்
I.C.E Fest Little Falls, Minnesota Jan 11-12 இது மூன்றாவது வருட பனிக் கொண்டாட்டம். உறைந்த ஏரியின் மேல் பெரும் Carousel (merry-go-round சுழற்றி) மற்றும் பனிச் சைக்கிள், பனிச்சப்பாத்து Snowshoeing போன்றவற்றையும் பழகலாம்.
பனிப்பெட்டி நாட்கள்/Icebox days International Falls, Minnesota Jan 16-19 International Falls அமெரிக்காவின் ஐஸ்ப் பெட்டி என்று பல்லாண்டுகளாகப் பெயரிடப்பட்ட இடம். இங்கு வடக்கு எல்லையில் இருப்பதால், அமெரிக்க, கனேடிய மக்கள் உறைந்த வான்கோழிப் பந்து Frozen-Turkey bowling, சமூக Cross-country skiing, மற்றும் பனியில் Chilli சமைத்தல், இரவில் snow shoeing, 10K சறுக்குதல் போட்டி போன்றன நடைபெறும்.
Snokato Days Mankato, Minnesota Jan 17-26 இந்தக் கொண்டாட்டம் மன்கேட்டோ மக்கள் பனி காலக் குதூகலம். Skiing, Ice Skating, sled bowling, மற்றும் எவ்வாறு Curl எனப்படும் விளையாட்டை பயிலுதல் போன்றவை காணப்படும். இதை விடப் பனிச் சைக்கிள் மற்றும் பனிச்சப்பாத்து Snow shoeing போன்றவையும் உண்டு.
பனியில் கலைக் குடில்கள் / Art Shanty Projects Minneapolis, Minnesota Jan 18-Feb 9 பல்வேறு கலைக்கண்காட்சிகள் மினியாப்பொலிஸ், ஹரியட் ஏரியில் கொண்டாடப்படும். இது மினசோட்டா மாநிலத்தின் தனிப்பட்ட அம்சம், கலைஞர்களால் 2004 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பல்லாயிரம் மக்கள் பனியில் வந்து பார்க்கும் இடம்.
பனியில் நாய்ச் சறுக்கு வண்டி ஓட்டல் போட்டி /John Beargrease Sled Dog Marathon Duluth-Grand Portage, Minnesota Jan 18-29 இம்முறை இந்தப்போட்ட அலஸ்கா மாநிலப்போட்டியைத்தவிர அமரிக்க கீழ் 48 மாநலத்தில் பெரியதொரு பனிப்போட்டியாகும். இந்தப் போட்டக்கு மினசோட்டா மக்களின் ஆரவம் தொடர்ந்தும் அதிகரித்தவாறேயுள்ளது. இது நீண்ட சறுக்குப் பாதை வடக்கில் Grand Portage இல் இருந்து தெற்கில் Duluth வரை வருகிறது. பங்கு பெற்ற விரும்புவோர் இந்தப் பனிபாதை எங்கும் ஆங்காங்கே சாவடிகளில் lodgesகளில் தரித்து பங்கு பெற்றிக் கொள்ளலாம். இதனுடன் சிறப்பிக்கும் வகையில் Jan 25 பெரும் பியர் கொண்டாட்டம் Canal Park Brewing கம்பனியால் ஆரம்பிக்கப்படும். இதையொட்டி பல Duluth சிறு குடில் பனிகால வர்த்தகங்களும் கொண்டாட்டத்திற்காகத் திறக்கும்.
International Ski Jumping Competition Bloomington, Minnesota Jan 19 ஒலிம்பிக் பந்தயத்தில் போட்டி போடவிரும்பும் அமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய சறுக்குப் பந்தய குதிப்பாளர் Bloomington, Bush Lake பனிக்குதித்தல் மைதானத்தில் தமது ஆற்றலைக் காட்டுவர். இதைப் பார்க்க வருவோர்க்கு பனிகால சுவையான சொக்கிளேட், இதர பண்டங்கள் உணவு வாகனங்களின்/Food Trucks மூலம் தரப்படும்
பெரும் வடக்கு கொண்டாட்டங்கள் /The Great Northern Minneapolis and St. Paul Minnesota Jan 23 – Feb 2 இது பல கொண்டாட்டங்களையும் கொண்டமையும்.
St. Paul Winter Carnival Rice Park, St. Paul Jan 23 – Feb 2 வருடாந்த பனிச் சிற்பக்கண்காட்சிகள். விதம் விதமான ஜோலிக்கும் பனிச்சிப்பங்கள் பனிச் செதுக்கல் கலைஞர்கள் பலரின் கைவண்ணங்கள். மேடை இசை நிகழ்வுகள், பெரியோரும், சிறியவர்களும் பனி வளையத்தில சறுக்கும் சந்தர்ப்பம், சூடு,குளிர் உணவுகள், பானங்கள் எனப் பலவகை பண்டங்களும் உண்டு.
US Pond Hockey Championships Lake Nokomis Jan 23-26 இது ஒரு நொக்கோமிஸ் ஏரி மக்கள் சம்பிரதாயம். குளத்து ஐஸ் ஹொக்கிப்போட்டிகள். இந்தப் போட்டியாளர்கள் தங்கக் கிண்டிக்காக Golden Shovel போட்டி போடுவர்.
City of Lakes Loppet Winter Festival Lake Bde Maka Ska (பழய கல்ஹுன் ஏரி) Jan 30 – Feb 2 லோப்பேட் என்பது நாட்டு சறுக்கல் cross-country skiing போட்டியாகும். இதை பலவிதங்களில் பங்கு கொள்ளலாம். சறுக்கலாம், ஓடலாம், நாயுடன் சறுக்கலாம் இவை அனைத்தும் பிடே மகஸ்கா ஏரியைச் சுற்றித்தான். மேலும் பனி பருமன் சில்லுச் சைக்கிள் ஓட்டம் போன்றவையும் நடைபெறும்.
பனியில் பட்டம் விடுதல் நிகழ்வு/Lake Harriet Kite Festival Minneapolis Minnesota Jan 25 உங்கள் பட்டங்களையும் கொண்டு வந்து ஏற்றலாம். இது ஒரு மாநிலப் பனிகாலப் பொழுது போக்கு. இவ்விடம் மேலும் குடும்பங்களுக்கு பிடிக்கும் பனி மீன் பிடித்தல் காட்சிகள், பனிச் சறுக்கல், பனிச் சைக்கிள், இனிப்பான மார்ஸ மலோ வாட்டுதல் போன்றவையும் நடைபெறும்.
டுலூத் ஐஸ் கலவன் போட்டிகள்/ Duluth Ice & Mixed Fest Duluth Minnesota Jan 31 – Feb 2 இது பனிமலை ஏறிகள், பியருடன் கொண்டாடும் ஒரு கலவன் நிகழ்வுக் கொண்டாட்டம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad