புத்தகத் திறனாய்வு – பெர்முடா
பெர்முடா முக்கோணத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பக்கத்தில போனவன் எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்திடும்; காரணமே புரியாமல் காணாமல் போனவர்கள் அதிகம் பேர். அப்படிப்பட்ட ஒரு கதைக்களம் தான் இது. “பெர்முடா” – இதுதான் கதைத் தலைப்பு. களம் என்று பார்த்தால் பொருந்தாக் காமம்; மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமம் இதுதான் கதையின் கரு.
சில புத்தகங்களைப் படிக்கும் போது, ஏன்தான் இதைப் படித்தோம் என்று தோன்றும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அப்படித் தான் தோன்றியது. அத்தனை ஆபாச வார்த்தைகள். காமத்தை இவ்வளவு விரிவாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. பாலியல் வக்கிரம் கலந்த வார்த்தைகளைத் தவிர்த்திருந்தால் ஒருவேளை நன்றாக இருந்திருக்குமோ என்னவோ! நல்ல காலம் படுக்கையறைக் காட்சிகள் எதுவும் இல்லை என்பதை நினைத்து சந்தோசப்பட முடிகிறதேயொழிய கதை கூறிய விதம் குறித்து கூற எதுவுமில்லை. கேபிள் சங்கரின் படைப்புகள் தொடர்ந்து இப்படியே அமையுமாக இருந்தால், திரைப்படங்களுக்கு இருப்பதைப் போல, வருங்காலத்தில் நாவலுக்கும் சென்ஸார் போர்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
நன்றி
தியா