\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சங்கமம் 2020

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் பொங்கல் கொண்டாட்ட விழாவான சங்கமம், இந்தாண்டு ஜனவரி மாதத்தின் 18ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை 11:30 ஆரம்பித்த இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை ஆடல், பாடல், இசை, நாடகம் எனத் தொடர் நிகழ்ச்சிகளால் நிரம்பி வழிந்தது.

மதிய சிறப்புப் பொங்கல் உணவு மற்றும் உபசரிப்புடன் விழா தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களை மினசோட்டாத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் முதலில் வாழ்த்திப் பேசினார். மினசோட்டா மாகாண அரசு, இந்த 2020 ஜனவரி மாதத்தை ‘தமிழ் மொழி மற்றும் மரபு மாதம்’ எனப் பிரகடனப்படுத்தியதைக் கொண்டாடுவது, இந்த விழாவின் முக்கிய அம்சமாக இருந்தது. சிறப்பு விருந்தினராக நிகழ்வின் ஆரம்பத்திலேயே வருகை தந்திருந்த மினசோட்டா செனட்டர் திரு. ஜான் ஹாஃப்மென் (John Hoffman) அவர்கள் இந்தப் பிரகடனத்தை மேடையில் வாசித்துக் காட்டினார். அதனுடன், மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட “தமிழரின் வரலாற்றுக் காலவரிசை” என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்திப் பேசினார். முன்னதாக, மேடையில் இசைக்கப்பட்ட பறையை வாங்கி, அவரும் குழுவுடன் இணைந்து இசைத்து மகிழ்ந்தார். இந்தக் காலவரிசைப் புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் தமிழ்ப் பள்ளி மாணவர் மேற்படிப்பு உதவி நிதிக்குச் சேர்க்கப்படும் என்று திரு. சிவானந்தம் அவர்கள் கூறினார். அரங்கின் வெளியே தமிழர் காலவரிசை தொகுப்பு நீளமான பதாகையில் விருந்தினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்திலும் தமிழ்ப் பள்ளியிலும் தொண்டாற்றும் தன்னார்வலர்களுக்கு ஜனாதிபதி தன்னார்வலர் சேவை விருதினையும், மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சேவை விருதினையும் மினசோட்டா கல்வித்துறை இயக்குனராக இருக்கும் லே ஸ்லேகெர் (Leigh Schleicher) அவர்கள் வழங்கினார்கள்.

SANGAMAM 2020 - 29-E_620X413
SANGAMAM 2020 - 32-E_620X413
SANGAMAM 2020 - 21-E_620X413
SANGAMAM 2020 - 30-E_620X413
SANGAMAM 2020 - 31-E_620X413
SANGAMAM 2020 - 33-E_620X413
SANGAMAM 2020 - 28-E_620X413
SANGAMAM 2020 - 22-E_620X413
SANGAMAM 2020 - 02-E_620X413
SANGAMAM 2020 - 24-E_620X413
SANGAMAM 2020 - 25-E_620X413
SANGAMAM 2020 - 26-E_620X413
SANGAMAM 2020 - 23-E_620X413
SANGAMAM 2020 - 27-E_620X413
SANGAMAM 2020 - 19-E_620X413
SANGAMAM 2020 - 18-E_620X413
SANGAMAM 2020 - 17-E_620X413
SANGAMAM 2020 - 15-E_620X413
SANGAMAM 2020 - 14-E_620X413
SANGAMAM 2020 - 16-E_620X413
SANGAMAM 2020 - 20-E_620X413
SANGAMAM 2020 - 08-E_620X413
SANGAMAM 2020 - 07-E_620X413
SANGAMAM 2020 - 09-E_620X413
SANGAMAM 2020 - 10-E_620X413
SANGAMAM 2020 - 13-E_620X413
SANGAMAM 2020 - 06-E_620X413
SANGAMAM 2020 - 11-E_620X413
SANGAMAM 2020 - 05-E_620X413
SANGAMAM 2020 - 12-E_620X372
SANGAMAM 2020 - 04-E_620X413
SANGAMAM 2020 - 03-E_620X413
SANGAMAM 2020 - 01-E_620X396
SANGAMAM 2020 - 29-E_620X413 SANGAMAM 2020 - 32-E_620X413 SANGAMAM 2020 - 21-E_620X413 SANGAMAM 2020 - 30-E_620X413 SANGAMAM 2020 - 31-E_620X413 SANGAMAM 2020 - 33-E_620X413 SANGAMAM 2020 - 28-E_620X413 SANGAMAM 2020 - 22-E_620X413 SANGAMAM 2020 - 02-E_620X413 SANGAMAM 2020 - 24-E_620X413 SANGAMAM 2020 - 25-E_620X413 SANGAMAM 2020 - 26-E_620X413 SANGAMAM 2020 - 23-E_620X413 SANGAMAM 2020 - 27-E_620X413 SANGAMAM 2020 - 19-E_620X413 SANGAMAM 2020 - 18-E_620X413 SANGAMAM 2020 - 17-E_620X413 SANGAMAM 2020 - 15-E_620X413 SANGAMAM 2020 - 14-E_620X413 SANGAMAM 2020 - 16-E_620X413 SANGAMAM 2020 - 20-E_620X413 SANGAMAM 2020 - 08-E_620X413 SANGAMAM 2020 - 07-E_620X413 SANGAMAM 2020 - 09-E_620X413 SANGAMAM 2020 - 10-E_620X413 SANGAMAM 2020 - 13-E_620X413 SANGAMAM 2020 - 06-E_620X413 SANGAMAM 2020 - 11-E_620X413 SANGAMAM 2020 - 05-E_620X413 SANGAMAM 2020 - 12-E_620X372 SANGAMAM 2020 - 04-E_620X413 SANGAMAM 2020 - 03-E_620X413 SANGAMAM 2020 - 01-E_620X396

பரதம், பறை, திரையிசைப் பாடல்களுடன் ஆடல், பாட்டு கச்சேரி, இராசேந்திரச் சோழன் வரலாற்று நாடகம், மழலைகளின் மலரும் மொட்டும், சிலம்பம், தவிலுடன் கூடிய நாதஸ்வரம், புல்லாங்குழலிசை, குரலற்றவர்களின் குரல் சமூக நாடகம் எனத் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருந்தன. இடையில் இரவு உணவுக்காகச் சிறிது நேரம் இடைவேளை விடப்பட்டது.

முந்தைய தினமான வெள்ளிக்கிழமை தொடங்கி, சனிக்கிழமை அன்று மதியம் வரை பனி பொழிந்து கொண்டே இருந்தாலும், மக்கள் அனைவரும் பெரும் திரளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சிறுவர் சிறுமியர்கள் எடுத்துக்கொண்ட கடும் பயிற்சிகள், அவர்களுடைய மேடையேற்றத்தில் நன்றாகத் தெரிந்தன. அன்றைய தினம் நகரமே பனிப் பொழிவுக்கு நடுங்கி, அவரவர் இருப்பிடத்திற்குள் அமைதி காத்தாலும், இந்தச் சங்கமம் நிகழ்வுக்கு வந்திருந்த தமிழ் மக்களை இந்தப் பனிப்பொழிவு எந்தவிதத்திலும் தயங்கவோ, தடுத்து நிறுத்தவோ செய்யவில்லை எனத் தெரிந்தது. உற்சாகமாகக் கலந்து கொண்டு, ஆரவாரமாக விழாவைக் கொண்டாடி, இரவில் கவனமாக வண்டியோட்டி வீடு திரும்பினார்கள்.

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad