மினசோட்டாவில் பனிக்கால சிலை
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மினசோட்டா மாநிலம் குளிர் மிகுந்த பிரதேசமாகும். பனிப்பொழிவு மிக அதிகமிருக்கும். குளிர்காலத்தில் தொடர்ந்து சில நிமிடங்கள் வெளியே நின்றால் உறைந்து போய் விடக்கூடிய அளவுக்கு வெப்பநிலை பூஜ்யத்துக்கும் 50 டிகிரி குறைவாய் இருக்கும் தினங்களும் இங்குண்டு. குளிர்காலங்களில் சிறுவர்களும், பெரியவர்களும் விளையாட அவர்களுக்குத் தகுந்த வகையில் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறும், அதில் ஒன்று தான் இன்று நாம் பார்க்கக்கூடிய பனி திமிங்கலம்.
இந்தப் பனி திமிங்கலத்தை ஆஸ்டின் (Austin), ட்ரெவர் (Trevor), கான்னர் பார்ட்ஸ் (Connor Bartz), சேத் ஹான்சன் (Seth Hanson) மற்றும் காலேப் கிரோஸி (Caleb Kroeze) ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இதனை, இவர்கள் தங்கள் வீட்டின் முன் சேர்ந்திருந்த பனிக் குவியலைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். 22 அடி உயரமும் 63 அடி நீளமும் கொண்ட இந்தப் பனித் திமிங்கலச் சிலையைச் செய்வதற்கு இவர்களுக்குப் பல நாட்கள் பிடித்ததாம்
இந்தப் பனி திமிங்கலத்தின் பெயர் வால்விஸ் (WALVIS)
ஆப்பிரிக்க கண்டத்தில் காணப்படும் திமிங்கலத்தை இங்கு எதற்குச் செய்கிறார்கள் என்று தோன்றுகிறதல்லவா? பார்வையாளர்கள் தரும் தொகையை, இவர்கள் உகாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ளவர்களுக்குச் சுத்தமான தண்ணீர் கிடைப்பதற்கு உதவி வருகின்றனர்.
இந்தப் பனி திமிங்கலத்தைப் பார்ப்பதற்குப் பலரும் வந்த வண்ணம் உள்ளனர் இவர்கள் இதற்கு முன்னர் இதே போன்ற பல சிலைகளைச் செய்துள்ளனர்.
இவர்களது படைப்புகள், உதவித் திட்டங்கள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு
இந்த முகநூல் பக்கத்திற்குச் செல்லவும்
https://www.bartzsnow.com
https://www.facebook.com/BartzSnowSculptures/
இந்தப் பனிச் சிலையின் சில புகைப்படங்கள் உங்களுக்காக.
- ராஜேஷ் கோவிந்தராஜன்
Tags: bartzsnow, Snow Sculpture