மினசோட்டா மருத்துவர் ஆறுமுகம் – நேர்காணல்
மினசோட்டாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகக் குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருபவர், திரு. ராமலிங்கம் ஆறுமுகம் அவர்கள். மருத்துவர் ஐயா என்று மினசோட்டாத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்த இவர், பின்பு லண்டனிலும், அமெரிக்காவிலும் மேற்படிப்பை முடித்து, மினசோட்டாவில் இருபதாண்டு காலமாக மருத்துவச் சேவை புரிந்து வருகிறார். 2016 இல் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற இவர், மினசோட்டாவில் இருக்கும் தமிழ் சமூகத்திற்காகத் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார். அது மட்டுமின்றி, மினசோட்டாவில் தமிழ் பயிலும் மாணவர்களின் மேற்படிப்பிற்காகத் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கும் பெருமளவு நிதியுதவி செய்து வருகிறார்.
சமீபத்தில் பனிப்பூக்களுக்கு அவர் அளித்த நேர்காணலில், அவரது கல்வி, பணி, பல்வேறு மருத்துவப் பிணிகள், மருத்துவச் செலவு, சமூகப் பணி உள்ளிட்ட நமது பல கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார். இந்த நேர்காணலின் காணொளிப் பகுதிகளை, பனிப்பூக்கள் யூ-ட்யூப் சானலில் வாசகர்கள் கண்டுகளிக்கலாம்.
நேர்காணலின் முதல் பகுதியை இங்குக் காணலாம்.
- சரவணகுமரன்.