\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உலகம் உன் பக்கம்

Filed in கதை, வார வெளியீடு by on March 3, 2020 0 Comments

அடுத்த வகுப்புக்குக் கணக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்பதால், தனது சீட்டில் உட்கார்ந்து அன்று பாடம் எடுக்கப் போகும் கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிரேசன். அப்பொழுது உள்ளே வந்த தாளாளரின் அலுவலக உதிவியாள் தாளாளர் அவனை அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

கதிரேசனுக்கு அப்படியே ஜில் என்று பயம் வந்து ஒட்டிக் கொண்டது. தாளாளர் எதற்குத் தன்னை வரச் சொல்லுகிறார்?. எப்பொழுதும் பிரின்ஸ்பால்தான் கூப்பிட்டுப் பேசுவார். இன்று அதிசயமாய் இவர் கூப்பிட்டிருக்கிறாரே, நினைக்கும்போதே பயம் வந்தது. என்ன சொல்லப் போகிறாரோ?

அவன் கவலை நியாயமான கவலைதான், அவன் ஆசிரியப் பயிற்சியோ, இல்லை இளங்கலை, முதுகலைப் பட்டமோ பெற்றவனல்ல. அவன் அப்பா நிறையச் செலவு செய்து இஞ்சினியரிங் சீட் வாங்கி அவனைப் படிக்க வைத்தார். படித்து முடித்து ஒரு வருடம் எங்கும் வேலை கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் இவனே பக்கத்தில் இருந்த இந்தப் பள்ளிக்கு விண்ணப்பித்தான்.

இண்டர்வியூ அன்று தாளாளாரும், பிரின்ஸ்பாலும் உட்கார்ந்திருந்த அறைக்குள் நுழைந்தான். பிரின்ஸ்பால் இவனது சான்றிதழ்களை வாங்கிப் பார்த்து விட்டுத் தாளாளரிடம் இவனது சான்றிதழ்களைக் கொடுத்து ஏதோ சொன்னார். தாளாளர், “தம்பி இஞ்சினியரிங்

முடிச்சிருக்கீங்க, உங்க படிப்பு சம்பந்தபட்ட வேலைக்குப் போகலாமில்லை. இங்க இஞ்சியரிங் முடிச்சவங்களுக்குக் கொடுக்கற அளவுக்கு வேலை இல்லையேஎன்றார்.

இவன் சார், “நான் ஒரு வருசமா வேலை தேடிகிட்டுத்தான் இருந்தேன், இப்படி வேலை தேடி வீட்டுல வெட்டியா இருக்கறதுக்கு ஏதாவது வேலைக்குப் போகலாமேன்னுதான் முயற்சி பண்ணினேன். நான் இஞ்சினியரிங் முடிச்சிருந்ததனால கணக்கு நல்லாச் சொல்லித் தருவேன்.

நீங்க வேணா எந்த வகுப்பு மாணவங்களுக்கு எடுக்கச் சொன்னாலும் எடுக்கறேன்“,

உன்னோட எண்ணத்தைப் பாராட்டறேன், இருந்தாலும் உன்னை நிரந்தரமா வேலைக்குப் போட முடியாது, காரணம் நீ எப்ப வேணாலும் வெளியே போகத் தயாரா இருப்பே, அதுனால சின்னக் கிளாசுக்குப் போடறேன், அங்கயும் தகுதியான வாத்தியார் கிடைச்சா உன்னை வெளியே அனுப்பிச்சிடுவோம் என்ன சொல்றே?”

அவன் மனதில் சட்டென ஒரு நிம்மதி வந்தது. அப்பாடி, சும்மா வீட்டுல உட்கார்ந்து சாப்பிடறதுக்கு ஏதோ ஒரு வேலை கிடைச்சா அப்பாவுக்கு உதவியாக இருக்கும். நினைத்துக் கொண்டவன், “நீங்க எந்த வகுப்புக்கு எடுக்கச் சொன்னாலும் எடுக்கறேன் சார்.” பணிவுடன் சொன்னான்.

அப்படிக் கிடைத்து ஆறு மாதமாய் மாதம் ஐந்தாயிரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் செலவுக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது. இப்பொழுது தாளாளர் திடீருன்னு கூப்பிட்டிருக்காருன்னா, ஐயோ போதுமுன்னு சொல்லி வேலைய விட்டு அனுப்பிச்சிடுவாரோ?

பிரின்ஸ்பாலின் அறையைத் தொட்டபடித்தான் தாளாளரின் அறை. உள்ளே தாளாளர் யாரையோ திட்டிக் கொண்டிருப்பது இங்கேயே கேட்டது, பயத்தால் கால்கள் நடுங்கின.

இவன் வந்திருப்பதை உள்ளே சென்று சொன்ன அலுவலக உதவியாளரிடம் உள்ளே அனுப்பு என்று சொல்வது இவனுக்குக் கேட்டது.

நடுக்கத்துடன் உள்ளே நுழைந்தான். இளைஞன் ஒருவன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான். நல்ல உடைகள் போட்டு வசதியானவனாகத்தான் தெரிந்தான். அவனைக்

கண்டபடிப் பேசிக் கொண்டிருந்தார் தாளாளர். என்ன நினைச்சுகிட்டு இருக்கே? சொன்ன தேதியில வண்டிய சர்வீஸ் பண்ணி கொடுக்கலையின்னா நீ எல்லாம் எதுக்கு வொர்க்ஷப்புன்னு வச்சுகிட்டு இருக்கே?

உன்னைய நம்பி நாலு வண்டி கொடுத்திருக்கோம், உங்கிட்ட வண்டியக் கொடுத்துட்டு நாங்க வேற வண்டியை வாடகைக்கு எடுத்து ஓட்ட முடியாது.         நாளைக்குக் காலையில எல்லா வண்டியும் வந்துடும், அந்த இளைஞன் பய பக்தியுடன் சொன்னான். அவன் பேச்சைக் காதில் வாங்காதவர் போல சட்டென இவன் பக்கம் திரும்பி

ஏந்தம்பி போன வாரம் சாயங்காலம்  எட்டாம் கிளாஸ் பசங்களுக்குக் கணக்கு நல்லா வரலையின்னு சொல்லிக் கொடுன்னு சொல்லியிருந்தாராமில்லை, பிரின்ஸ்பால் அதைச் செஞ்சியா?”

நான் சொல்லித்தரேன்னு சொல்லிட்டேன், அதுக்கப்புறம் என்னையக் கேக்கவே இல்லையிங்களே“, என்று பயந்து கொண்டே சொன்னான்.

நீ போய்க் கேட்டியா? அந்தப் பசங்களுக்குப் பாடம் எடுக்கறேன்னு சொன்னேனே, அவங்களுக்கு எடுக்கட்டுமா? அப்படீனு கேட்டியா?”

எதோ சொல்ல வாய் திறந்தவனைபேசாதேஉனக்கு ஒரு வேலை சொன்னா நீதான் அடுத்து அந்த வேலையை விருப்பத்தோட எடுத்துச் செய்யணுமே தவிர மறுபடி உன்னைய வந்து கேட்டுட்டு இருக்கமாட்டாங்க, அவனை ஒரு முறை முறைத்தார். அவன் சப்தநாடியும் ஒடுங்க நின்றான். சரிங்க சார் மெல்லத் தலையாட்டினான்.

மீண்டும் முதலில் திட்டிக்கொண்டிருந்தவன் பக்கம் திரும்பி நாளைக் காலையில எனக்கு எல்லா வண்டியும் ஸ்கூல் காம்பவுண்ட்ல நிக்கணும்.

சரிங்க அவனும் தலையாட்ட, இருவரையும் பார்த்துபோங்கஎன்று தலையசைத்தார். விழுந்தடித்து வெளியே வந்தனர் இருவரும்.

சீட்டில் வந்து உட்கார்ந்த கதிரேசனுக்கு மனசே கேட்கவில்லை. அவர்கள் கேட்டார்கள், நான் சரி என்றேன், அதற்கு பின் அவர்கள்தானே வரவேண்டும். இது கூடப் புரியாமல் தாளாளர் என்னைத் திட்டுகிறார், அதுவும் யாரோ ஒரு வெளியாள் முன்பு. நான் இஞ்சினியரிங்க் முடிச்சும் இந்த மாதிரி ஆளுக கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கு. மனதுக்குள் அப்படி ஒரு துக்கம் வந்து உட்கார்ந்து கொண்டது. வேலை செய்யவே பிடிக்கவில்லை. சீக்கிரம் இங்கிருந்து போய் விடவேண்டும்.         

மாலை பள்ளி முடிந்து எல்லோரும் சென்று விட்டார்கள். இவன் மட்டும் தன்னைப் பற்றிய கவலையிலேயே நாற்காலியில் உட்கார்ந்திருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. காவலாளி வந்து அறையை மூட வேண்டும் என்று சொன்னவுடன்தான் ஞாபகம் வந்து எழுந்தான்.

அப்படியே நடந்து வெளியே வந்தவனை எதிரில் வந்த இளைஞன்  பார்த்துச் சிரித்தான். முதலில் இவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அப்புறம்தான் ஞாபகம் வந்த்து, இன்று இவன் தாளாளரிடம் திட்டு வாங்கியவன். வேறு வழியில்லாமல் கூச்சத்துடன் சிரித்தான்.

வாங்க சார் வேலை முடிஞ்சுதா? சகஜமாய்க் கேட்டவனுக்கு இவன் சங்கடமாய்த் தலையசைத்தான். வாங்க டீ சாப்பிடலாம், இவன் வேண்டாமென்று தலையசைத்து இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுல போய்ச் சாப்பிடப் போறேன், என்றவனைக் கையைப் பிடித்து, சும்மா வாங்க சார் என்று அங்கிருந்த ஒரு பேக்கரிக்கு அழைத்துச் சென்றான்.

டீ வரும் வரை டேபிளில் உட்கார்ந்தவர்கள், அந்த இளைஞன் சார் எம்.எஸ்சியா கதிரேசனிடம் கேட்டான். இவன் இல்லை பி.. என்றான். அவன் வியப்புடன் பி.. முடிச்சுட்டு எப்படி? இவன் தர்ம சங்கடத்துடன் படிப்புக்கு ஏத்த வேலை இன்னும் கிடைக்கலை, வீட்டுல சும்மா இருக்க வேணாமுன்னு, இழுத்தான்.

வெரி குட் சார் இப்படித்தான் இருக்கணும். பாராட்டினான் அந்த இளைஞன். கதிரேசன் சலிப்புடன் போங்க சார் நீங்க பாராட்டறீங்க, இன்னைக்குப் பாத்தீங்கல்ல, என் மேலே எந்தத் தப்பும் கிடையாதுட்யூசன் கேட்ட பசங்க என்னை வந்து பாத்திருக்கணுமில்லை, அதைக் கூடக் கேக்காம இவர் என்னையத் திட்டறாரு

சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்த இளைஞன், சார் அவர் திட்டுனதுல தப்பு ஒண்ணும் இல்லையே சார். இவன் சற்றுக் கோபத்துடன் என்ன சார் நீங்க இப்படிச் சொல்றீங்க?

பொறுமை சார் இஞ்சினியரிங் முடிச்சுட்டு எந்த வேலை வேணா செய்வேன், என் குடும்பத்துக்கு மாசமானா என் மூலமா பணம் கொடுக்கோணுமின்னுதான் இந்த வேலைக்கு வந்தீங்க. இவன் ஆமாம் என்றான். அப்படி இருக்கும்போது, அவங்களுக்கு ட்யூசன் எடுத்தா அந்த மாணவனுங்க மூலமா உங்களுக்கு ஒரு வருமானம் கிடைக்குமுன்னு அவர் நினைச்சதுல என்ன தப்பு? அதுவும், ட்யூசன் நடத்தறதுக்கு என் வகுப்பறையே கொடுக்கும்போது இவன் ஏன் உபயோகப்படுத்த மாட்டேங்கறான்னு அவருக்குக் கோபம் வருமா வராதா?

சட்டென அவன் தலையில் யாரோ தட்டியது போல உணர்ந்தான். ஆம் தாளாளர் இப்படி ஏன் நினைத்திருக்கக் கூடாது. அதுவரை சலிப்புக் கொண்டிருந்த எண்ணம் அப்படியே வடிந்து விட்டது போல் உணர்ந்தான்.

இன்னொண்ணு சொல்லட்டுமா சார் அவர் என்னையத் திட்டுனது கூட என் நன்மைக்குதான். புன்னகையுடன் சொன்னவனை வியப்புடன் பார்த்தான்.

என்ன சார் பாக்கறீங்க, நான் வெறும் பி. பட்டதாரி, இப்ப என் ஒர்க்ஷாப்ல நாலு மெக்கானிக் மூணு அசிஸ்டெண்ட்டுகளை வச்சு வேலை செய்யறேன். பி. படிச்சிருக்கேன் அப்படின்னு நானும் இரண்டு வருசம் வீட்டுல இருந்தேன், அப்புறம்தான் பக்கத்துல இருந்த ஒர்க்ஷாப்ல சும்மா உட்கார்ந்து பேசிப் பொழுதைப் போக்கிட்டு இருந்தவனை அங்கிருந்த மெக்கானிக் தொழில் சொல்லிக் கொடுத்து, இப்படி உருவாக்கினாரு. உங்க தாளாளருதான் முதன் முதல்ல என்னைப் பத்திக் கேள்விப்பட்டு வண்டிகளை சர்வீசுக்கு விட்டாரு. அப்படி இருக்கறவரு நம்மளைத் திட்டறது நம்மளைப் பத்தி நாம உணருமின்னுதான் சார்.

கதிரேசன் வீடு செல்லுபோது இந்த உலகத்தில் தானும் ஒரு பெரிய ஆளாய் வரவேண்டும் என்ற எண்ணத்துடனே சென்றான்.

தாமோதரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad