\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மினசோட்டா ஹோர்மல் SPAM கதை

 

நாம் வாழும் செழிப்பான மாநிலம் மினசோட்டாவானது இன்று அமெரிக்காவின் மூன்றாவது செல்வந்த மாநிலம் சென்று கருதப்படுகிறது. இதன் காரணம் எமது மாநில மக்கள் அவர்கள் மேல் ஐரோப்பிய சமநல மனப்பாடும், அவர்கள் இட்ட அத்திவாரமுமே காரணி எனலாம். இந்த அத்திவரத்தை இட்டுத் தந்த மினசோட்டா தொழிலதிபர்கள் பலரின் கதையும் சுவரஸ்யமானவையே. இந்தக் கதைகளில் ஒன்று தான் ஜே கர்த்தர்வுட் ஹோர்மல் Jay Catherwood Hormel கதை.

இரண்டாம் தலைமுறை தொழிலதிபர் ஜே ஹோர்மல் அவர்கள் செம்டெம்பர் மாதம் 11ம்திகதி, 1892 இல், ஆஸ்டின், மினசோட்டாவில் பிறந்தார். இவர் குடும்பம் ஜேர்மனிய அடிக்கொடியுடன் அமெரிக்கா வந்தடைந்தவர்கள். 1942 இல் ஜே ஹோர்மல் பாடசாலை விட்டு தந்தையார் கம்பனியில் வேலை பார்க்கத் தொடங்கினார். இதன் போது முதலாவது உலக யுத்தம் ஆரம்பமாயிற்று. இதன் போது தமது ஜேர்மானிய அடிக் கொடிகள் சார்ந்த விசுவாசத்தைத் தள்ளி அமெரிக்கப் போர் வீரனாக அதுவும் மினசோட்டா மாநில முதல் அணியில் போரிற்கு ஐரோப்பா சென்றார்.

போர் முனையில் பயின்றவை

போர் முனையில் அவர் சென்றாலும், போருடன் சார்ந்த பலவற்றையும் தெரிந்து கொண்டார் ஜே ஹோர்மல் அவர்கள். இவற்றில் ஒன்று போர் முனை மக்கள் பிரச்சாரம் propaganda . போரின் பின்னர் இவர் மீண்டும் ஐரோப்பா சென்று தனது பிரஞ்சு மணப்பெண்ணுடன் ஆஸ்டின் மினசோட்டா திரும்பினார்.

இவர் போர் கால மனநிலை பற்றி சில குறிப்புக்கள் உள்ளன. உலக போர்க்காலத்தில் அமெரிக்க சிப்பாய்கள் ஐரோப்பிய மகளிரை மணந்து வீடு திரும்பியது யாவரும் அறிந்த விடயமே. ஆயினும் அவர்கள் எங்கெங்கு எப்படி வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தார்கள் என்பது தனித்தனியான அனுபவங்களே.

ஜே ஹோர்மல் தனது வனிதையைச் சந்திக்க, பிரஞ்சு ஊர்ப்புறங்களில் போர் காலத்திலும் தனியே சைக்கிள் ஓடிச் சென்று வந்தாராம். இவர் இங்கிலாந்தில் 1922 இல் தனது பிரஞ்சு மணப்பெண் ஜேர் மெயின் டிபுவா Germaine Deboise என்பவரை மணம் முடித்தார். இது ஆஸ்டின் மக்களுக்கு ஆச்சாரியத்தைத் தந்ததாம். தம்பதிகள் தமது வாழ்வை ஆஸ்டினில் ஆரம்பித்தனர். காலாகாலத்தில் இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். ஜோர்ஜ் அல்போர்ட் ஹோர்மல், தோமஸ் டிபுவா ஹோர்மல், ஜேம்ஸ் கர்த்தவுட் ஹோர்மல் என மகன்களுக்குப் பெயரிட்டனர்.

ஐரோப்பிய உற்பத்தி முறைகள் ஆஸ்டினில்

உற்பத்தியில் ஜரோப்பிய புது முறைகளை ஆஸ்டின் மின்சோட்டாவுக்கும் ஏன் அமெரிக்காவுக்குமே கொண்டு வர ஜே ஹோர்மல் முனைந்தார். ஜே ஹோர்மல் அவர் திருமணமாகி நான்கு வருடங்களின் பின்னர் இன்னும் ஒரு ஜேர்மானிய ஐரோப்பியரை ஆஸ்டின் மினசோட்டாவிற்கு அழைத்து வந்தார். ஜே அவர்கள் போர்க்களத்தில் கற்றுக் கொண்ட பிரச்சார விளம்பர பேச்சு பிற்காலத்தில் அவர் வசீகரமகாப் பேசும் விதமும் ஆயிற்று. இதனால் அவர் பலரையும் தமது வர்த்தக குறிக்கோள்களுக்கு உதவி செய்ய அனுசரணை பெற முடிந்தது,

குறிப்பாக போர்க்காலம் எதிரிகள் பக்கத்தில் இருந்த ஹர்ம்பேர்க், ஜெர்மனி இறைச்சிப் பொட்டலங்கள் செய்யும் உற்பத்தியாளர் ஒருவரைச் சந்தித்தார். அவ்விடம் தோமஸ் ஜோன் Thomas Jorn முழு இறைச்சியையும் பதப்படுத்தி உலோக குவளைகளிலும் நிரப்பும் canning meat கண்டு பிடித்து இருந்தார். இவர் ஆஸ்டின் மினசோட்டா வந்து, இவ்விடம் முதன் முதல் பதப்படுத்திய குவளை இறைச்சிப் பொருளை உருவாக்க உதவினார்.

நுகர்வோர் கொள்வனவு மாற்றத்தை உண்டு பண்ணல்

இதனால் மக்கள் கசாப்புக் கடை சென்று நேரடியாக இறைச்சி வாங்கும் வழக்கம் மாற ஆரம்பித்தது. தமக்குத் தேவையான போது ஏற்கனவே பதப்படுத்திய இறைச்சி வாங்கக் கூடிய செளகரியம் உண்டாயிற்து.

ஹோர்மல் தம்பனி 1927 இல் தனது முதல் தகரக் குவளையில் அடைத்த பதப்படுத்திய இறைச்சி உணவை அமெரிக்கச் சந்தைக்குக் கொண்டு வந்தது.

ஹோர்மல் தலைமை மாற்றம்

தந்தையார் ஜோர்ஜ் ஹோர்மல் 1800களில் தாபனத்தை ஆரம்பித்து இருந்தும், விளம்பரம் மூலம் வியாபார வளர்ச்சி 1920 களின் பின்னர் ஜே அவர்களால் தான் வார்ந்தது. அவர் தந்தையர் இடம் இருந்து முழு வியாபாரத்தையும் 1920களின் இறுதிப் பாகங்களில் பொறுப்பெடுத்தார்.

இதனால் தாயார் லில்லியன் Lilian, தந்தை ஜோர்ஜ் George அக்காலத்தில் பிரகாசமான உயர்தர சமூகத்தோர் கூடும் பெவர்லி ஹில்ஸ்  Beverly Hills இல் இளைப்பாறினர்.

அமெரிக்க நாடு 1930 களில் பெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர் கொண்டது. எனினும் அச்சமயம் ஆஸ்டின் மினசோட்டா ஹோர்மல் தாபனம் ஏறத்தாழ 4,500 தொழிலாளர்கள் கொண்டு இயங்கியது. இந்தக் காலப்போக்கில் தகரக் குவளைகளில் சூப், மற்றும் டின்ரி மோர் உருளைக்கிழங்கு, முள்ளங்கி, இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்பட்ட ஒரு கூழ்வகை சந்தைக்கு ஹோர்மல் கொண்டு வந்தார். 

1937இல் அவர் மேலும் அந்தக்காலத்திற்கு அமெரிக்காவிற்குப் புதிதாக இருந்த சிறியதளவு மசாலா வசனைத் திரவியங்கள் கூடிய கூட்டு உடைய குவளைப் பன்றி இறைச்சியை அறிமுகப்படுத்தினர். இதை Spicey + Ham = SPAM என அழைத்தனர். இது அமெரிக்க நுகரவோர் பதப்படுத்திய குவளை இறைச்சி உட்கொள்ளலை நான்கு மடங்கு உயர்த்தியது. இது 1937இல் 18 சதவீதமாக நுகரப்பட்ட தகரக் குவளை தின்பண்டம் 1940இல் 70% சதவீதமாக அதிகரித்தது. இது மேலும் ஹோர்மல் கம்பனியின் தானத்தையும் நாட்டின் பெரும் தனியார் இறைச்சி பதப்படுத்தும் தாபனமாக நிலைகொள்ள வைத்தது. அப்போது ஹோர்மல் ஆஸ்டின் மாத்திரமல்லாது, நெபிராஸ்கா மாநிலத்திற்கும் தனது உற்பத்திச்சாலைகளைத் தாபித்து விரிவடைந்தது.

ஹோர்மல் வளர்ச்சி

அந்தக் காலத்தில் எத்தனை பன்றிகள் பதப்படுத்தப் பட்டன என்பதே ஹோர்மல் தாபன உற்பத்திக் கணிப்பாக இருந்து வந்தது. 1891இல் தந்தை ஜோர்ஜ் ஹோர்மல் காலத்தில் வருடாந்தம் 610 பன்றிகள் பதப்படுத்தப் பட்டன. அந்த எண்ணிக்கை 1924இல் 1 மில்லியனாக அதிகரித்தது. இன்று 2020இல் ஹோர்மல் தாபனம் தினமும் 20,000 பன்றிகளைப் பதப்படுத்துகிறது. இது வருடக்கணிப்பில் பார்த்தால் ஏறத்தாழ 7 மில்லியன் பதப்படுத்தல் ஆகுகின்றது.

ஹோர்மல் தாபனத்தின் வளர்ச்சியை வெறும் பன்றி பதப்படுத்தல் மாத்திரம் கொண்டு அளவிடுவது தற்காலத்தில் சரியற்றது. ஜே ஹோர்மல் அவர்களது திறமையால் அவர் இந்த விவசாய வர்த்தகத்திற்குக் கொண்டு வந்த கடைப்பிடிப்புக்கள் பலவாகும். இவையே ஹோர்மல் தாபனத்தின் வளர்ச்சிக்கு மிகையான உந்து கோல்கள் ஆகும்.

விளம்பர முறைகள் அறிமுகப்படுத்துதல்

ஜே ஹோர்மல் தம் போர்காலத்தில் கற்ற பல பிரச்சாரயுக்திகளைத் தமது வர்த்தகம் வளரவும், புதிது புதிதாக்கக் கையாண்டார். இதில் ஒரு யுக்தியாக சாதாரண மக்கள் ஆடல் பாடல்களுக்குத் திரண்டதால், ஜே ஹோர்மல் தமது தனிப்பட்ட 20 நபர் மெக்ஸிக்கன் இசைக்குழுவினரை விளம்பரங்கள் செய்ய வைத்திருந்தாராம். இந்தக் குழுவிற்கு ஹோர்மல் பிர்னேர்ஸ் என்று பட்டமும் அளிக்கப்பட்டது. இவர்கள் சிலி கொன் கான் (Chilli-Con-Carne) எனும் உணவுப்பட்டத்தை அறிமுகப் படுத்தினர். அக்கால அமெரிக்கருக்கு இது ஒரு புதமையான விதம், எனவே ஹோர்மல் விளம்பரங்கள் அவர்களை இயல்பாக ஈர்த்தன.

மேலும் ஆண்கள் மலிந்திருந்த தாபனத்தில், ஜே ஹோர்மல் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் குறிப்பிட்ட தொழில்களில் பெண்களுக்கும் வேலைவாய்ப்புக்களை உண்டு பண்ணிக் கொடுத்தார். குறிப்பாக பெண்கள் மொழி பெயர்ப்பு,தட்டச்சு வேலைகளில் அமர்த்தினார். மேலும் பெண் ஊழியர்களை நீங்களும் விட்டுக் கொடுக்காது தளத்தில் விளையாடங்கள் ஊக்குவித்தாராம். இதுவை “ஹோர்மல் பெண்கள் – Hormel Girls” எனும் இராணுவத்தில் இருப்பது போன்று ஆயினும் ஹோர்மல் நிறங்களுடன் தனிப்பட்ட பறை,ஊதுகருவிகள் கொண்ட இசைக்குழுவையும் உருவாக்கி விளம்பரம் செய்தார். 

போர்க்காலத்தில் மக்கள் தேசியவுரிமை ஊக்குவிப்புக்கு இப்பேர் பட்ட இசைக்குழுக்களினைப் பரீட்சார்த்தமாகக் கொண்டிருந்தனர். அதே தந்திரத்தை சிறப்பாக தனியார் விளம்பரங்களில் பாவித்தார் ஜே ஹோர்மல். அத்துடன் மேடை விளம்பரங்கள் மாத்திரம் அல்ல வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் ஹோர்மல் பெண்கள் சார்பில் உருவாக்கி அமெரிக்க நுகர்வோரை அடைந்த தாம் ஹோர்மல் விளம்பரங்கள். எனினும் மிகவும் எளிமையாக இந்தத் தொழில்சாலையை ஆரம்பித்து அவர் தந்தையாரும், ஜே ஹோர்மலும் சில விடயங்களில் ஒத்துப்போகவில்லை. இவர் விளம்பரச் செலுவுகள் 1950இல் மூன்று மடங்காக, அதைவது $1.3 மில்லியனாக அதிகரித்து. விளம்பரம் பற்றி இவர் 1930களில் அவர் தந்தை ஜோர்ஜ் உடன் பலவாக்குவாதங்களைக் கண்டார் என்றும் கூறப்படுகிறது. 

இவையாவும் 1954இல் ஜே ஹோர்மல் மாரடைப்பு நோய்களின் வதையால் படிப்படியாக பின்தங்கின. ஆயினும் இன்றும் February, 21, 2020 இல் $23.94 பில்லியன் சந்தைப்பெறுமதியுள்ள மினசோட்டாக் கம்பனியாகும்.

ஜே ஹோர்மல் அவர்குடும்ப உற்பத்திசாலையையும் ஆஸ்டின் மினசோட்டாவையும் நாடு முழுக்க அறிமுகப்படுத்தி, மாநில வர்த்தகத்தை விரிவுபடுத்திய முதல் தர தொழிலதிபர் என்று கூறுவது என்றும் மிகையாகாது.

தொகுப்பு 

-ஊரவன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad