\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நீ கேட்டால் நான் மாட்டேனென்று

அவளருகே சென்றேன்.. அவயங்களைப் பருகினேன்..
அணைக்க முயன்றே அருகினில் நெருங்கினேன்…
அதெல்லாம் இருக்கட்டும், அங்கேயே நில்லென்றாள்..
அங்கம் தொடாமலே அன்பினைக் காட்டென்றாள் ….

காதலின் ஸ்பரிசம் காற்றுப்புகா நெருக்கம்
காமனவன் கணைதவிர்த்துக் காத்திடும் மருந்துமன்றோ!
காததூரம் நிற்பதற்குக் கால்கடுக்க வந்ததேனோ?
காதலியே சற்றுமென்னைக் காருண்யமாய் நோக்கிடென்றேன்!

இன்பமொரு எல்லைக்குள் இருப்பதுவும் முறைதானே
இன்றந்தப் பெருமாசை இதயத்துள் எழுந்ததென
இல்லத்துள் நீபுகுந்து இக்கணமே வாவென்பாய்
இப்பேதை கொள்கவென இலைவிரித்துப் பரிமாறவோ?

சாக்காடு என்றென்று சான்றோரும் கண்டிலரே
சாதல் வருவதற்குள் சாட்சிகள் ஏதுமின்றிச்
சாமப் பொழுததனில் சாந்தமாய்ச் சல்லாபித்து
சாத்திரங்கள் மறந்திங்கு சாதித்திருப்போம் வாவென்றேன்!

உன்னையும் நான்மறுக்க உண்மையான விளக்கமென்ன?
உலகமே இன்றிங்கு உணர்ந்திடும் நிலையுமென்ன?
உயிரினைக் குடித்திட உதித்ததந்தக் கிருமியென்ன?
உச்சமான காமமதை உருக்குலைத்திடும் கொரனாவுமே !!!

-மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad