\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கொரோனா பயம்

காலம் பொன் போன்றது 

இப்போதைக்கு விட்டு விடுங்கள்

உயிர் அதைவிடப் புனிதமானது 

பயணத்தை நிறுத்துங்கள் 

உலகை உருவாக்கும் முயற்சியில் 

உங்கள் வாழ்க்கையை ஒப்புவியுங்கள்

கண்களில் ஒளிக்கீற்றை வரவழைத்து 

மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்

நம்பிக்கை என்ற ஒரு சிறு சொல்லே

காலத்தை மாற்றும் அற்புதம் என்று  நம்புவோமாக

இதயத்துடன் இதயம் பேசுவோம்

சொற்கள் மௌனித்து போகுமுன்

உமக்காய் இன்னும் உம் மக்களுக்காய் 

உங்கள் கைகளைக் கழுவுங்கள்

மரணத்துக்காய் திறக்கப்பட்ட பெருங் கதவை

முழுவதுமாய் மூட உதவுங்கள்

வெற்றுச் சாளரங்களின் வழியே உலகை ரசியுங்கள்

மூப்பர் யாரையும் வெளியில் அழையாதீர்கள்

அண்டை வீட்டாரிடம்  ஒரு சிறு கையசைப்புடன் விடைபெறுங்கள்

உமக்காகவும் உம் மக்களுக்காகவும் மன்றாடுங்கள் 

ஆம்… தனிமை பயமானதுதான்

ஆனால்… நோய் அதைவிடப் பயங்கரமானது

காலம் பொன் போன்றது 

இப்போதைக்கு விட்டு விடுங்கள்

உயிர் அதைவிடப் புனிதமானது 

சிலவார அமைதிக்கு பின் மீண்டும் கூடலாம்

கூடி நாங்கள் ஒரு புது உலகம் செய்யலாம்

-ஊரவன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad