தன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு
இன்றைய தினம் உலகையே ஸ்தம்பிக்கச் செய்து மனிதர்களைப் பயமுறுத்தி, வீட்டில் அடைப்பட்டிருக்கச் செய்த, கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. அவசியக் காரணங்களுக்காகக் கூட வெளியில் செல்வதற்கு மிகவும் பயந்து போய் உள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாத சூழ்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து தொழிலாளிகளும் பணிக்கு வர முடியாத நிலையில், பல நிறுவனங்களில் கையிருப்பு இல்லாமல் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் சொந்த முயற்சியில் முகக் கவசம் தயாரித்துக் கொண்டுள்ளனர். தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தயாரித்தது போக பிற தன்னார்வல அமைப்பிற்கும் முகக் கவசங்களைத் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்கள் சிலர்.
வடஅமெரிக்காவில், மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள உட்புரி நகரில் வசிக்கும் பாமா ராஜன் மற்றும் லிண்டா பெர்ன்ஹார்ட் (Linda Barnhart) இருவரும், மேலும் 15 தன்னார்வல நண்பர்களுடன் சேர்ந்து சுமார் 1724 முகக் கவசங்களைத் தயாரித்துள்ளனர். இவர்கள், இந்த முகக் கவசங்களை உட்புரி நகரிலுள்ள கீழ்கண்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர்.
- Nexus Family Healing
- Pride Institute
- Lakewinds Coop
- Dakota County Services
- St Therese Nursing Home
- Oakdale Meadows Nursing Home
- United Hospital mom’s and dads/partners Mother Baby unit
- MHealth Clinic patients/families
- Allina Mental Health and Addiction for
- MHealth Bethesda CoVid 19 Hospital families of discharges patients
- Our households/ families/community partners
பனிப்பூக்கள் சார்பாக. இச்சேவையில் ஈடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரும் பாதுகாப்பாக இருந்து, முகக் கவசம் அணிந்து கொரோன வைரஸ் என்ற கொடிய வைரஸை வெல்வோம்.
அவர்கள் தயாரித்த முகக் கவசங்களின் புகைப்படங்கள் சில உங்களுக்காக.
-ராஜேஷ் கோவிந்தராஜன்