தேர்த் திருவிழா
தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் நகரில் திருக்காளகத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான திருத்தலமாகும். இங்கு,மார்ச் எட்டாம் தேதி அன்று மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. பத்து தினங்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவை ஃபிப்ரவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் பல்வேறு சமுதாயம் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் கடவுளர்களும்,அம்மனும் வீதி உலா வர,திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கியமான நிகழ்ச்சியாக, ஒன்பதாம் நாள் தேரோட்டம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
உள்ளூர்ப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள்மற்றும் பக்தர்கள் ஆகிய அனைவரும் பங்கேற்று, தேரை இழுத்தனர். இதில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மாங்கல்யம், குங்குமம் வழங்கப்பட்டது. முடிவில் அன்னதானம் செய்யப்பட்டது.
இந்தத் தேரோட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்காக:
-ராஜேஷ்