\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கடவுளைக் காண்பீர்!

பொன் கொண்டோர்,

பொருள் கொண்டோர்,

மண், மாளிகை கொண்டோர்,

பூமியை 

ஆண்டோரையும் கண்டீர்! 

பூவையர் மனம் 

வென்றோரைக் கண்டீரோ? 

மங்கையரின்றி ஒரு 

மார்க்கம் உண்டோ – இந்த

மானிட உலகில்? 

 

அன்பைப் பொழியும் தாயாக, 

காதலால் கசிந்துருகும் தாரமாக,

சோதனையில் தோள்தாங்கும் 

உற்ற சகோதரியாக, 

தாயோ தந்தையோ

மூப்படைந்ததும் 

மடிதாங்கும் சேயாக … 

பெண்ணைக் கண்டோர் 

உண்டிங்கு! 

 

ஆனால்,

சமூகப் பாகுபாடின்றி,

கருணையே வடிவாக 

மானிட உயிரைக் காத்திட

அச்சமின்றி, அருவெறுப்பின்றி

அன்போடு அரவணைக்கும் 

தெய்வத்தைக் கண்டார் 

உண்டோ? 

 

காண்பீர் 

கண்ணெதிரே காண்பீர்! 

அவர்தாம் 

செவிலியர்,

செவிலியர்,

உயிருள்ள தெய்வத்தைக் 

காண்பீர்!!! 

 

– பண்ணை பாலா

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad