\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

என் புன்னகைக்குப் பின்னால்

என் புன்னகைக்குப் பின்னால் 

பார்க்கவும் முடியாமல்

தவிர்க்கவும்  முடியாமல் சில வடுக்கள்……

காயங்கள் காய்ந்த பின்பும் முத்திரைகளாய் !

 

என் புன்னகைக்குப் பின்னால் 

கேட்கவும் முடியாமல்

சொல்லவும் முடியாமல் சில பதில்கள்….

கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் !

 

என் புன்னகைக்குப் பின்னால் 

ஏற்கவும் முடியாமல்

எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் ……

குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய்!

 

என் புன்னகைக்குப் பின்னால்

இறக்கவும் முடியாமல்

சுமக்கவும் முடியாமல் சில சுமைகள்….

அழுத்தம் கூட்டும் வலிகளாய் !

 

என் புன்னகைக்குப் பின்னால்

உணர்த்தவும் முடியாமல்

விளக்கவும் முடியாமல் சில உண்மைகள் ….

புரிந்து கொள்ள முடியாத புதிர்களாய்!

      மீனா !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad