\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சொர்க்கம் நேரிலே!

செல்வத்தில் முதற் செல்வம் உடல்நலம் – இதைச்

சிந்தையிலே ஏற்றால்தான் வரும் பலம்

உள்ளத்தில் அமைதிமிக அவசியம் – இதை

உணர்தலே ஆரோக்கிய ரகசியம்

இயற்கைநெறி தவறிடாமல் வாழ்வதே – நம் 

இதயபலம் உடல்நலத்தைக் காண்பதே!

செயற்கை முறை வா.ழ்க்கையினைத் தவிர்ப்பது – தூய 

சிந்தனையில்  உடல்நலத்தை அழைப்பது

தூயகாற்று தூயநீர் உணவுகள் – இவை 

தொடர்ந்துவரும் நலத்துக்கான நனவுகள்!

ஓயாது தென்றலாய் காற்றுதான் – நம் 

உடல்நலத்தைக் காப்பாற்றும் ஏற்றுதான். 

உடல்நலம் கடிகாரம் உண்மைதான் – அது

ஒழுங்காக இயங்குவது நன்மைதான்

தடம்மாறி நேரம் காட்டக் கூடாது  – நாம்

தடுமாறும் வாழ்க்கை வாழக்கூடாது!

நடைப்பயிற்சி உடற்பயிற்சி தினம்தினம் – மனம் 

நன்றாக ஒன்றிச் செய்தல் பெருந்தனம் 

கடைசிவரை நலத்துடனே வாழ்வதே – நம் 

கண்முன்னே தெரியும் சொர்க்கம் நேரிலே!

 

கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad