\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மன அழுத்தம் தவிர்

பணமும் புகழும் காரும் வீடும் 

எல்லாம் இருந்தும், பாதியில் போனாய்

ஏன் நண்பா? தெரியாதா உனக்கு

கடுகும் கூட கண்ணுக்கருகில்

பாறை நிறைந்த மலையாய்த் தெரியும்! 

மலையும் கூட தூரப் பார்வையில் 

சிறிய கடுகாய் மாறித் தெரியும்! 

கவலை கூட நெருங்கிப் பார்க்க

அணையா நெருப்பாய்ச் சுட்டுத்தீர்க்கும் 

அணையில் நிற்கும் நீரைப் போல 

திறக்க முடியா மடையைப் போல

அழுத்திப் பார்க்குக்கும் நம் மனதைக் கூட! 

திறந்துவிட அணையும் தீரும்

அழுதுவிட அழுத்தம் குறையும்! 

பழுது பட்ட மனமும் கூட

பாசத்தாலே கூடிப் போகும்! 

இனியும் வேண்டாம் அழுத்தம் மனதில்

திறந்து விடுவோம் கவலை நீரை

வெள்ளம் போல! 

வெள்ளைச் சிரிப்பில் உலகைப்

பார்ப்போம்!!! 

 

  இளங்கோ

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad